Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவம்பரில் வழக்கு.. டிசம்பரில் தீர்ப்பு! திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு தீர்ப்பே காரணம்! சு.வெ பளீர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் வழக்கமான சட்ட நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக, நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் கலவர சூழலும் உருவாகியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜர் திரையரங்கம் அருகே, "மதுரை மண்ணில் மதவெறிக்கு இடமில்லை மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்" என்ற முழக்கத்துடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மதுரை மாநகர் புறநகர் மாவட்டக் குழு சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் துவக்கி வைத்து பேசினார். போராட்டத்தில் பேசிய அவர்," பொதுவாக சிறிய பிரச்சனை கலவரமாக மாறி, அதை காவல்துறை கட்டுப்படுத்தி, அதன் பின்னர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெறுவது உலக வழக்கம்.

Su Venkatesan Thirupparankundram tn govt

சு வெங்கடேசன்

ஆனால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே பிரச்சனையும் கலவர சூழலும் உருவானது என்பது கவலைக்குரியது. இதனால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படலாம் என காவல்துறை நடவடிக்கை எடுத்த நிலையில், அந்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றமே காவல்துறையையும் மாவட்ட ஆட்சியரையும் கேள்வி கேட்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர் போன்ற மாநிலங்களின் வரிசையில் தற்போது திருப்பரங்குன்றத்தையும் கொண்டு வந்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பொதுமக்களால் எழுந்தது அல்ல. மக்களுக்கும் இந்த விவகாரத்திற்கும் நேரடி தொடர்பில்லை. இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில், கார்த்திகை மாதத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்து சமய அறநிலைத்துறை மூலம் தீபம் ஏற்ற வேண்டும். மலை உச்சியில் உள்ளது சிக்கந்தர் தர்கா அல்ல என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பல மாதங்கள் கழித்து தான் நீதிமன்றத்தை நாடியிருப்பதில் அரசியல் நோக்கம் உள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு

நவம்பர் 13ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு முரணாக, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். அந்த தீர்ப்பில் 39 இடங்களில் தீபத்தூண் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு தொல்லியல் துறை 1981ஆம் ஆண்டிலேயே திருப்பரங்குன்றம் மலையை முழுமையாக ஆய்வு செய்து, தீபத்தூண் உள்ள இடங்களை வரைபடத்துடன் வெளியிட்டுள்ளது.

தீபத்தூண் சர்ச்சை

தமிழகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலமாக இருப்பதாலேயே, இந்தியாவிலேயே அதிக கோயில்கள் உள்ள மாநிலமாக விளங்குகிறது. இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் மட்டும் சுமார் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இத்தனை கோயில்கள் உள்ள தமிழகத்தில் இந்துத்துவ அரசியல் வேரூன்ற முடியாததாலேயே, தொல்லியல் துறையும் அறநிலைத் துறையும் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகின்றன.

ஆன்மீக மரபு

ஆன்மிகத்தையும் மதவெறி அரசியலையும் பிரித்து அறியும் ஆற்றல் தமிழக மக்களுக்குள்ளது. தமிழகத்தின் வரலாறையும் ஆன்மீக மரபையும் பாதுகாப்பதில் தொல்லியல் துறைக்கும் அறநிலைத் துறைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. தமிழ் மண்ணில் எப்போதும் மதவெறிக்கும், மதவெறி அரசியலுக்கு வாய்ப்பேயில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+