96ல் 91 வட இந்தியர்கள்.. தென்னக ரயில்வே பணியில் தமிழர்கள் புறக்கணிப்பு.. வெங்கடேசன் எம்.பி. புகார்
மதுரை: 96 தென்னக ரயில்வே பணியிடங்களுக்கு 91 வட இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும், தென்னக ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் மதுரை எம்பி வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று சு.வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டியின் பாதுகாவலர் பதவிக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. துறையில் பணியாற்றுகிற சுமார் 5,000 பேர் கலந்துகொண்ட இத்தேர்வில், 96 பேர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஐவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 91 பேரும் வட இந்தியர்கள்.

தேர்வு எழுதியவர்களில் சுமார் 3,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அதில் ஐவர் மட்டுமே தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே தென்னக ரயில்வேயில் தமிழர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் இது, தென்னக ரயில்வேவின் தமிழர் விரோதப் போக்கின் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது.'' இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications