தங்க தமிழ்ச்செல்வனின் அடேங்கப்பா உண்ணாவிரதம்.. ஆண்டிப்பட்டியே ஆடிப் போய்க் கிடக்கு!
Recommended Video

ஆண்டிப்பட்டி, தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அமமுக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வழக்கமான உண்ணாவிரதம் போலவே இது இல்லை. மாறாக பட்டாசு வெடிக்க, இசை முழங்க, தடபுடலாக நடந்து வருகிறது இந்த உண்ணாவிரதப் போராட்டம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தத்தமது தொகுதிகளில் உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. வைகை அணை சாலையில் எம்ஜிஆர் சிலை பின்புறம் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

பெரும் திரளான பாட்டிமார்கள், பெண்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு தங்களது தொகுதியை புறக்கணித்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தாத மக்கள் அரசைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. 2 மாதங்களுக்கு போராட்டம் நடத்துவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
[சென்னை விமானங்களை தகர்ப்போம்.. 14 வயது பொடியனின் மிரட்டல்.. மதுரையில் பரபரப்பு!]
உண்ணாவிரதப் போராட்டத்தை மாலையில் டிடிவி தினகரன் வந்து முடித்து வைத்து சிறப்புரையாற்றவுள்ளார். தகுதி நீக்கம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதில்லை என்ற முடிவை தினகரன் தரப்பு எடுத்துள்ளது. இந்த நிலையில் உண்ணாவிரதம் உள்ளிட்டவை மூலம் மக்கள் கவனத்தை ஈர்க்க முடிவு செய்து களம் இறங்கியுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன் சும்மாவே கூட்டத்தைக் கூட்டி மிரள வைப்பார். அந்த வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் ஆண்டிப்பட்டியே ஆடிப் போய்க் கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications