ஆடி அசைஞ்சு வந்த ஆபிசர்ஸ்.. டென்சனான மதுரை கலெக்டர் .. மறக்க முடியாத தண்டனை கொடுத்து அதிரடி
மதுரை: மதுரை கலெக்டர் ஆபிஸுக்கு காலை 9.30 மணிக்கு மேல் தாமதமாக வந்த அரசு அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியே நிற்க வைத்து தண்டனை கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக தமிழ்நாடு முழுவதுமே திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும். மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் எந்த பிரச்சனை என்றாலும் ஆட்சியரை சந்தித்து சமானியர்கள் புகார் அளிக்க முடியும். அந்த வகையில் துறை வாரியாக சரிசெய்யப்படாத பிரச்சனைகளை அந்தந்த துறை அதிகாரிகளை அழைத்து பிரச்சனைகளை சரி செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார். விவசாயிகள் குறைதீர் கூட்டமும் இதேபோல் தான் மாவட்டங்களில் ஏதோவது ஒரு திங்கள்கிழமை நடைபெறும். இதனால் எப்போதுமே மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் திங்கள் அன்று பரபரப்பாக காணப்படும்.

போலீஸ் ஸ்டேசன்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பிரச்சனைகள், ஆர்டிஒ அலுவலகங்களில் தீர்க்கப்படாத பிரச்சனை நிலம் சம்பந்தமான பிரச்சனை, முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை, விவசாயிகள் உதவி தொகை, ஊனமுற்றோர் உதவி தொகை, ஆக்கிரமிப்பு பிரச்சனை, சாலை பிரச்சனை, புதிய கோரிக்கைகள் என பல்வேறு விஷயங்களுக்காக மாவட்ட ஆட்சியரை மக்கள் சந்தித்து குறைகளை தெரிவிப்பார்கள்.
இந்நிலையில் அப்படித்தான் திங்கள்கிழமையான இன்று மதுரையில் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. இந்நிலையில் கலெக்டர் ஆபிஸ்க்கு காலை 9.30 மணிக்கு மேல் வந்த அரசு அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியே நிற்க வைத்து தண்டனை கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் கூட்டத்திற்கு 9.30 மணிக்கு மேல் தாமதமாக வந்த அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கூட்டரங்கிற்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.இதனால் பொதுமக்களும், மனு கொடுக்க வந்தவர்களும் ஆச்சர்யமாக பார்த்து சென்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா 9.30 மணிக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் கூட்டரங்கிற்கு வந்துவிட்டார்.சுமார் 15 நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்த கலெக்டர், பல அதிகாரிகள் அதற்குள்ளும் வராததால், தாமதமாக வந்தவர்களை வெளியிலேயே நிற்க வைத்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அதிகாரிகளை உள்ளே அனுமதித்தார். இந்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications