அதிமுகவை கிள்ளுக் கீரையாக நினைக்கிறார் அமித்ஷா.. கூட்டணி ஆட்சி என சொல்வதன் பின்னணி.. திருமாவளவன்!
மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவை கிள்ளு கீரையாக நினைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கட்சிகள் கொள்கை அளவில் மட்டுமல்லாமல் செயல் அளவிலும் இணைந்து செயல்பட முடியாமல் திணறி வருவதாக கூறிய அவர், கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக தான் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், மீண்டும் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கருத்தையே அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

திருமாவளவன் பேட்டி
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக - பாஜக பொருந்தா கூட்டணி என்பதை தொடக்கம் முதலே சொல்லி வருகிறேன். அவர்கள் கொள்கை அளவில் மட்டுமல்லாமல் செயல் அளவிலும் கூட இணக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட முடியாத அளவிற்கு இடைவெளி இருக்கிறது.
அதிமுக அறிவித்ததா?
வெளியில் இருக்கும் சில கட்சிகளை கூட்டணியில் இணைப்பதற்கு அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று பேசி வருகிறார். அதிமுக தமிழ்நாட்டில் வலுவான கட்சி. ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அந்த கட்சியின் விருப்பத்திற்கு மாறாக, அமித்ஷா தன் விருப்பத்தில் பேசி வருகிறார். அதிமுக மூத்த தலைவர்கள் ஒன்று கூடி அதிகாரப்பூர்வமாக கூட்டணி ஆட்சி என்று அறிவிக்கவில்லை.
திமுக கூட்டணி
அதிமுக கூட்டணி ஆட்சி என்று அறிவித்தால் மட்டுமே, அது அதிகாரப்பூர்வமானது. அமித்ஷாவாக சொல்லி கொண்டிருக்கும் வரையில், அதிமுகவை அவர் ஒரு கிள்ளு கீரையாக கருதுகிறார் என்றே உணர முடியும். திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைய வேண்டும் என்பது எல்.முருகனின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
தவெக ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து தவெக சார்பாக அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துவது அவசியமானது. ஆனால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருந்தால், பாதிக்கப்பட்டோருக்கு எந்த பயனும் தராது என்று தெரிவித்துள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications