மதுரையில் அம்மாவுடன்... திருமாவளவன் போட்ட ஒரே ஒரு போட்டோ... நெக்குருகி போன நெட்டிசன்கள்
மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மதுரையில் அம்மாவுடன் என்ற தலைப்பில் உடல்நலம் குன்றிய தாய்க்கு ஆறுதல் சொல்லுகிற வகையில் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த படத்தை பார்த்தை நெட்டிசன்களும் அவரது ஆதரவாளர்களும் நெக்குருகி பதிவிட்டு வருகின்றனர்.
மதுரையில் இந்த ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்களில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தார் திருமாவளவன். இன்று காலை முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரையில் அம்பேத்கர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
அப்போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினரை விரட்டி விரட்டி ஓடவிட்டனர். ஒருகட்டத்தில் கற்களை வீசியும் கொடி கம்பங்களாலும் பாஜகவினரை விரட்டி அடித்தனர் விசிகவினர். பின்னர் திருமாவளவன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி செய்தியாளர்களையும் சந்தித்தார்.

அம்மாவுடன் தலைப்பில் படம்
இந்த நிலையில் இன்று மாலையில் தமது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படத்தை திருமாவளவன் வெளியிட்டிருந்தார். மதுரையில் அம்மாவுடன் என்ற தலைப்பிலான படம்தான் நெஞ்சை கனக்க வைத்து கொண்டிருக்கிறது. ஆக்டிவ்வான நிலையில் திருமாவளவனின் அம்மாவை பார்த்தவர்களுக்கு படம் அதிர்ச்சியாகவே இருந்தது.

ஆறுதல் சொல்லும் திருமாவளவன்ன்
உடல் சற்று தளர்வுற்று திருமாவளவனின் தாயார் படுக்கையில் படுத்திருக்கிறார். அவரது கன்னத்தில் கைவைத்து ஆறுதல் கூறுகிறார் திருமாவளவன். இந்த படம் பதிவிட்டதுதான் தாமதம். சமூக வலைதளங்களில் வைரலாக அவரது ஆதரவாளர்களா ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் நெட்டிசன்கள் உருக்கமான பதிவுகளையும் போட்டு வருகின்றனர்.

இணையத்தில் உருக்கம்
ஃபேஸ்புக்கில் Sivam Sivam என்பவர் பின்னூட்டத்தில், என்னை அறியாமல் என் கண்ணில் நீர் கொட்டுகிறது எதனால் என்று தெரியவில்லை நம் தாய்க்கு பின் தலைவனை யார் அரவனைப்பார் என்பதனால்? என எழுதியுள்ளார். Sathyaprian Sathyaprian என்பவர், ஒன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை தலைவா அம்மா விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நெக்குருகிய நெட்டிசன்ஸ்
@Manianna2019 என்பவர், தத்தினேன் தரையினில் தாங்கியே பிடித்தாள் பாலகன் எனது பால்மேனி நோவினால் பத்தியம் கொள்வாள் பதைபதைத்து நிற்பாள் கண்டவர் கண் படுமோ கண்ணேறு கழிப்பாள்.... நம் தாய்.... மகனாய் அருகிருந்து மனமருந்தாக பயனுருங்கள் என பதிவிட்டுள்ளார். @kandasamyanbu என்ற நெட்டிசன், அண்ணா அம்மாவின் உடல் நிலையை அதிக கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள்..அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப விழைகிறேன்...ஜெய் பீம் ...Dr. K. அன்புமணி, லக்னோ எனவும் எழுதியுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications