Thiruparankundram: மத சடங்குகளை தடுப்பதால் சமூக நல்லிணக்கம் வந்துவிடுமா.? நீதிபதிகள் சொன்ன மிக முக்கிய பாயிண்டு
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளை அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அதை ஐகோர்ட் அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சமூக நல்லிணக்கம் தொடர்பாக நீதிபதிகள் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அதாவது மதச் சடங்குகளைச் செய்வதைத் தடுப்பதால் மட்டும் சமூக நல்லிணக்கத்தை அடைந்துவிட முடியாது எனத் தெரிவித்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஒன்பதாம் நாளான நேற்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள கார்த்திகை மகா தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என சொல்லி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

திருப்பரங்குன்றம்
இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் அமைந்துள்ள தீப தூணில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். இருப்பினும், உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து சிஐஎஸ்எஃப் வீரர்கள் உதவியுடன் மலை உச்சியில் அமைந்துள்ள உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அப்போது திருப்பரங்குன்றத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த வழக்கை இன்று காலையில் முதல் வழக்காக நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் விசாரித்தனர். காலையிலேயே அரசு தரப்பும் மனுதாரர் தரப்பும் பல்வேறு முக்கியமான வாதங்களை முன்வைத்தது. இதையடுத்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
இந்த மேல்முறையீட்டு மனுவில் மாலை 4 மணியளவில் ஐகோர்ட் மதுரை அமர்வு தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஏற்க மறுத்த ஐகோர்ட் மதுரை கிளை, இந்த மேல்முறையீட்டை ரத்து செய்தது. அரசு ஏதோ உள்நோக்கத்துடன் இந்த மேல்முறையீட்டைச் செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை நீதிபதி சுவாமிநாதனே விசாரிப்பார் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமூக நல்லிணக்கம்
முன்னதாக இந்த வழக்கு விசாரணை நடந்த போது சமூக நல்லிணக்கம் தொடர்பாக நீதிபதிகள் வாய்மொழியாகச் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அதாவது மத நல்லிணக்கம் என்பது சமூகங்கள் இணைந்து வாழ்வதாலேயே சாத்தியம் என்ற நீதிபதிகள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மதச் சடங்குகளைத் தடை செய்வதன் மூலம் இதை அடைந்துவிட முடியாது எனத் தெரிவித்தனர்.
மத சடங்குகள்
அப்போது நீதிபதிகள் மேலும், "ஒரு தரப்பினர் தங்கள் மதச் சடங்குகளைச் செய்யவிடாமல் தடுப்பதால் மட்டும் சமூக அல்லது மத நல்லிணக்கம் வந்துவிடாது. பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழ்வதால் மட்டுமே இதை அடைய முடியும். வருடத்தில் ஒரு முறை, யாருக்கும் பாதிப்பில்லாமல் தீபம் ஏற்றுவதை அனுமதிப்பதில் என்ன கஷ்டம்?" என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிபதிகள் மேலும், "100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை வேறு.. அப்போது இருந்த புரிதல்கள் வேறு. இப்போது இருக்கும் சூழல் வேறு.. இதே நிலை அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடருமா என்று கூட நமக்குத் தெரியாது. எனவே, அப்போது நடந்தது என சொல்லக்கூடாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications