திருப்பரங்குன்றத்தில் மலையுச்சியில் எரிந்த தீபம்.. இனி விடமுடியாது! போலீசுக்கு இந்து முன்னணி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக அரசு, போலீசாரின் இந்து விரோத போக்கு அதிகநாள் நீடிக்காது என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் எச்சரித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலைமீது தீபத்துாணில் தீபமேற்ற வலியுறுத்தி, ஆண்டுதோறும் போராடி வருகிறது, இந்தாண்டும் போராட்டம் நடைபெறும் என்றும் காடேஸ்வரா சுப்ரமணியம் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

கார்த்திகை மாத பிறப்பான கடந்த 16-ந்தேதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் யாரோ சிலர் அத்துமீறி தீபத்தை ஏற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் தந்தது.. இது தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்த அரசுப் பாண்டி, செல்வகுமார், சண்முகவேல், பிரசாந்த், சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

thiruparankundram karthigai deepam hindu munnani dmk

மூங்கில்கள்: இதனிடையே, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனர் சூரியநாராயணன் உத்தரவின்பேரில், மலை உச்சியில் உள்ள தூணை சுற்றி மூங்கில்களால் பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்..

மதுரை மாநகர் போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி உத்தரவின்பேரில் 16 பேர் கொண்ட ஆயுத படை போலீசார் இந்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும் மலையில் 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

அத்துமீறி தீபம்: இந்நிலையில், மலையுச்சியில் அத்துமீறி தீபத்தை ஏற்றியவர்களை கைது செய்துள்ளதற்கு, இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

"திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக பக்தர்களையும், இந்து முன்னணி நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. 1996ம் ஆண்டே சென்னை உயர்நீதி மன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

நெறிமுறைகள்: இந்நிலையில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பக்தர்கள் சிலர் மலைமீது தீபத்துாணில் விளக்கேற்றி உள்ளனர். இச்செய்தி பரவிய நிலையில் திருப்பரங்குன்றம் போலீசார், நீதிமன்ற உத்தரவு இருப்பதையும் மறந்து, அவசர, அவசரமாக எவ்வித நெறிமுறையையும் கடைபிடிக்காமல், தீவிரவாதிகளை பிடிப்பது போல ஹிந்து முன்னணியின் மதுரை கோட்ட செயலாளர் அரசபாண்டி, பிரசாத் உட்பட நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவைவிட "நாங்கள்தான் உயர்ந்தவர்கள். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது' என்பதைப் போல போலீசாரின் நடவடிக்கை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு, போலீசாரின் ஹிந்து விரோத போக்கு அதிகநாள் நீடிக்காது. ஹிந்து முன்னணி நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலைமீது தீபத்துாணில் தீபமேற்ற வலியுறுத்தி, ஆண்டுதோறும் போராடி வருகிறது. இந்தாண்டும் போராட்டம் நடைபெறும்.

மூடத்தனம்: ஏதோ தன்னிச்சையாக ஹிந்து முன்னணி போராடி வருகிறது என அரசும், போலீசாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். தட்டிக் கேட்கும், சுட்டிக் காட்டும் மக்களையெல்லாம் வழக்குகள் போட்டு முடக்கிவிடலாம் என நினைப்பது மூடத்தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+