திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா
மதுரை: அதிமுகவில் இருந்தபோது ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் உடனான சிடிஆர் நிர்மல் குமாருக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே ராஜன் செல்லப்பாவை எதிர்த்து திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல் குமார் களமிறங்கி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே இருக்கும் நிலையில், தவெக சார்பாக பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் திருப்பரங்குன்றம் தொகுதியில் சீனியரான சிடிஆர் நிர்மல் குமார் பிரச்சாரம் பெரியளவில் எடுபடவில்லை என்று தெரிகிறது. அதற்கு திருப்பரங்குன்றம் தவெக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

திருப்பரங்குன்றத்தில் போட்டியிட அக்கட்சியின் மருது பாண்டியன் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்தார். அண்மையில் தனியாக அலுவலகம் தொடங்கி பல்வேறு பணிகளையும் செய்து வந்தார். ஆனால் திடீரென திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல் குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். சிடிஆர் நிர்மல் குமார் முதலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாகவே இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் சிடிஆர் நிர்மல் குமார் களமிறங்கி இருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிமுகவில் ஐடி விங் இணைச் செயலாளராக சிடிஆர் நிர்மல் குமார் செயல்பட்டு வந்தார். அப்போது ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் உடன் சிடிஆர் நிர்மல் குமாருக்கு ஒத்துப் போகவில்லை.
அதிமுகவில் சிடிஆர் நிர்மல் குமார் வளர்வதை ராஜ் சத்யன் தடுத்து நின்றதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிடிஆர் நிர்மல் குமார் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மதுரை புறநகரில் உள்ள தொகுதிகளை குறி வைத்து பணியாற்ற தொடங்கி இருக்கிறார். இதனை அறிந்தே ராஜ் சத்யன் சிடிஆர் நிர்மல் குமாருடன் மோதி இருக்கிறார்.
இதன்பின் தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் தற்போது நேரடியாக ராஜ் சத்யனின் தந்தையான ராஜன் செல்லப்பாவுக்கு எதிராகவே களம் கண்டுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவுக்கு பெரியளவில் செல்வாக்கு இருந்தாலும், செளராஷ்டிரா மக்களின் ஆதரவு தவெக பக்கம் நகர்கிறது. அதேபோல் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு உருவாகி இருக்கிறது.
திமுகவுக்கு ஓரளவு வெற்றி வாய்ப்பு இருந்தாலும், ராஜன் செல்லப்பாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் சிடிஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றத்தில் பணியாற்ற தொடங்கி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் சிடிஆர் நிர்மல் குமாரின் கணக்கு சரியாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி












Click it and Unblock the Notifications