திருச்செந்தூரில் கோயிலில் ஆயிரக்கணக்கில் கட்டணமா? ஏழைகள் எப்படி தரிசனம் செய்வர்?: ஹைகோர்ட்
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டியின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியதில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.. அத்துடன், திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டணம் குறித்தும் நீதிபதிகள் காட்டமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சாதாரண நாட்களில் இலவச தரிசனம் உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விசேஷ நாட்களில் விரைவு தரிசன கட்டணம் இரட்டிப்பாக, அதாவது ரூ.200 வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர். இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பக்தர்கள் கைதானார்கள். பின்னர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.
தரிசன கட்டணம்: இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா விரைவில் தொடங்க உள்ளது. இதில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல.
கந்த சஷ்டி விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள், கடவுளை தரிசனம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். எனவே கந்த சஷ்டி விழாவின்போது தரிசனத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தரிசனத்துக்கு ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கவும், இதற்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
ஏழைகள்: இந்த மனுவானது நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவில்களில் தரிசனம் செய்வதற்கு ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்தால், ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்வார்கள்? அவர்களால் இந்த தொகையை செலுத்த இயலுமா? இவ்வளவு கட்டணம் ஏன்? அப்படியானால் ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா? என அடுத்தடுத்து கேள்விகளை காட்டமாக எழுப்பினார்கள்.
மேலும், இந்த மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, நவம்பர்7 க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications