"இந்த" ஒரு சின்ன மாற்றம்.. லட்ச கணக்கில் பணம் கொட்டும்.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கை நிறையச் சம்பாதிக்கும் பலரும் கூட பெரியளவில் சேமிக்க முடியாமல் திணறுகிறார்கள். அதற்கு அவர்கள் செய்யும் ஒரு சின்ன தவறு தான் முக்கியமான காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இந்த சின்ன விஷயத்தை மாற்றினால் எல்லாரும் லட்ச கணக்கில் கூட சம்பாதிக்க முடியும். இது தொடர்பாக நாம் எளிமையாகப் பார்க்கலாம்!

இன்றைய காலகட்டத்தில், இந்தியா இளைஞர்களின் மிகப் பெரிய கனவாக இருப்பது மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் என்பது தான். தொழில்நுட்பத் துறை, மருத்துவம், நிதி அல்லது சந்தைப்படுத்தல் என எந்தத் துறையாக இருந்தாலும், இந்த வருமான அளவை எட்டுவது ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக உயர்த்துகிறது.

Smart Money Management

கசப்பான உண்மை

ஆனால், ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், அதிக சம்பளம் மட்டுமே ஒருவருக்கு நிதி பாதுகாப்பை வழங்கிவிடாது. முறையான பண மேலாண்மை மற்றும் ஒழுக்கம் இல்லையென்றால், எவ்வளவு சம்பாதித்தாலும் மாத இறுதியில் கையில் பணம் இல்லாத நிலையே நீடிக்கும். உங்கள் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தவுடன் நீங்கள் செய்யும் முதல் காரியம் என்ன? முதலீடா அல்லது செலவா? இந்த ஒரு சிறிய பழக்கம் தான் நீங்கள் பெரும் செல்வந்தராகப் போகிறீர்களா அல்லது வாழ்நாள் முழுவதும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழப்போகிறீர்களா என்பதைத் தீர்மானிக்கிறது.

நிதி மேலாண்மையில் இரண்டு முக்கிய அணுகுமுறைகள் உள்ளன. அதாவது செலவு செய்த பிறகு முதலீடு செய்வது, முதலீடு செய்த பிறகு செலவு செய்வது. இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன.. இரண்டில் எது சரியானதாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

செலவு செய்த பின் சேமிக்கும் முறை

பெரும்பாலான மக்கள் இயல்பாகவே பின்பற்றும் முறை இதுதான். சம்பளம் வந்தவுடன் முதலில் வீட்டு வாடகை, மளிகை, மின்சாரக் கட்டணம் போன்ற அத்தியாவசியச் செலவுகளைச் செய்வார்கள். அதன் பின் வெளி உணவுகள், பொழுதுபோக்கு, ஷாப்பிங் போன்ற வாழ்க்கை முறைச் செலவுகளைச் செய்வார்கள். இறுதியாக, ஏதாவது பணம் மிஞ்சினால் அதைச் சேமிக்கவோ அல்லது முதலீடு செய்யவோ நினைப்பார்கள். இதில் உள்ள மிக பெரிய ஆபத்து வாழ்க்கை முறை செலவுகள் தான். அதாவது சம்பளம் உயர உயர, அதற்கேற்ப நமது செலவுகளையும் நாம் அதிகரித்துக் கொண்டே போவோம். இதனால் வருமானம் அதிகரித்தாலும், சேமிப்பு மட்டும் வளரவே வளராது.

முதலீடு செய்த பின் செலவு செய்யும் முறை

இந்த அணுகுமுறை அப்படியே தலைகீழானது. இந்த முறையில் சம்பளம் வந்தவுடன் முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை (உதாரணமாக 30%) முதலீட்டிற்கு ஒதுக்கிவிட வேண்டும். இதை 'ஆட்டோமேஷன்' மூலம் சம்பளம் வந்த அன்றே முதலீடு செய்யும்படி அமைப்பது சிறந்தது. முதலீடு போக மீதமுள்ள பணத்தில் மட்டுமே அந்த மாதத்தின் செலவுகளைத் திட்டமிட வேண்டும். இந்த முறை உங்களை ஒழுக்கமான முதலீட்டாளராக மாற்றுகிறது. உங்கள் வருமானம் உயரும்போது, உங்கள் முதலீடும் தானாகவே உயரும்.

என்ன காரணம்

பொருளாதார வெற்றி என்பது முதலீடுகளை விட உங்கள் பழக்கவழக்கங்களைச் சார்ந்தது. சம்பளம் அதிகமாகும்போது இயல்பாகவே ஆடம்பரச் செலவுகள் நம்மைத் தேடி வரும். ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் இல்லையென்றால், கூடுதல் வருமானம் அனைத்தும் தேவையற்ற செலவுகளில் கரைந்துவிடும். முதலீடே முதலில் என்ற கொள்கை, உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் இப்போதே பணம் செலுத்துவதை உறுதி செய்கிறது. இது உங்கள் தற்போதைய வாழ்க்கை முறைக்கும், எதிர்கால செல்வச் செழிப்புக்கும் இடையே ஒரு சரியான சமநிலையை உருவாக்குகிறது.

இரு நபர்கள்

உதாரணத்திற்கு மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இருவரை ஒப்பிட்டுப் பார்ப்போம். முதலாம் நபர் இவர் தனது செலவுகள் போக மீதமுள்ள தொகையை மட்டும் முதலீடு செய்கிறார். சராசரியாக மாதம் ரூ. 10,000 * மியூச்சுவல் ஃபண்ட் (SIP) மூலம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதேநேரம் 2வது நபர் சம்பளம் வந்த உடனேயே ரூ. 30,000 தொகையைத் திட்டமிட்டு முதலீடு செய்துவிட்டு, மீதமுள்ள ரூ. 70,000-ல் தனது வாழ்க்கையை நடத்துகிறார். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் தரும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள் எனில், 10 ஆண்டுகள் கழித்து அவர்களின் நிலை என்ன?

முதலாம் நபரின் முதலீடு ரூ. 12 லட்சமாக இருக்கும். ஆண்டுக்கு 12% வட்டி என்றால் அவருக்குக் கிடைக்கும் வட்டி வருமானம் ரூ. 10.4 லட்சமாக இருக்கும். மொத்த முதிர்வு தொகை ரூ.22.4 லட்சமாக இருக்கும். அதேநேரம் 2வது நபர் ரூ. 36 லட்சம் முதலீடு செய்திருப்பார். அவருக்குக் கிடைக்கும் வட்டி வருமானம் ரூ. 31.21 லட்சமாகும். மொத்த முதிர்வுத் தொகை ரூ. 67.21 லட்சமாகும்.

கூடுதல் சேமிப்பு

அதாவது முதலீட்டிற்கு முன்னுரிமை அளித்த நபர் சுமார் 45 லட்சம் ரூபாய் கூடுதலாகச் சேர்த்திருப்பார். இந்தத் தொகை ஒரு சொந்த வீடு வாங்குவதற்கோ அல்லது முன்கூட்டியே பணி ஓய்வு பெறுவதற்கோ மிகப்பெரிய பலமாக அமையும். 1 லட்சம் ரூபாய் சம்பளம் என்பது ஒரு நல்ல தொடக்கம். ஆனால், அதுவே இறுதி இலக்கு இல்லை. அந்தப் பணத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம். செலவு செய்த பிறகு மீதம் இருப்பதை முதலீடு செய்யக் காத்திருக்காதீர்கள்.. முதலீடு செய்த பிறகு மீதம் இருப்பதைச் செலவு செய்யப் பழகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+