ஆளுநர்களை நீக்க சட்ட திருத்த- ராஜ்யசபாவில் தனிநபர் தீர்மானம் கொண்டு வருவேன்: திருச்சி சிவா உறுதி
ஆளுநர்களை பதவி நீக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்தத்துக்கான தனிநபர் மசோதாவை தாம் கொண்டுவர இருக்கிறேன் என்கிறார் திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா.
மதுரை: மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்வதற்கு ஏதுவாக நாட்டின் அரசியல் சட்டசத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு ராஜ்யசபாவில் தனிநபர் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று திமுக மூத்த தலைவர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.
மதுரையில் திமுக சட்டத்துறை சார்பில் அரசமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திருச்சி சிவா பேசியதாவது: தமிழ்நாடு ஆளுநரில் அண்மைக்கால செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் இது போன்ற நிலை தொடர்கிறது. இது ஏற்புடையதல்ல. அரசியல் சட்டப் பிரிவு 356ஐ பயன்படுத்த முடியாத சூழலில் ஆளுநர்கள், மாநில அரசுக்கு எதிராக இதுபோன்று செயல் படுகின்றனர்.

திமுகவின் வழக்குறிஞர் அணி மட்டுமின்றி மாணவரணி, இளைஞரணி ஆகிய அணிகளும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான கருத்தரங்குகளை நடத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெயரளவுக்கு மாநில கூட்டாட்சி தத்துவம் உள்ளது. நமது அரசமைப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, அன்றைக்கே அண்ணா வலியுறுத்தினார். தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தபிறகு ஏதோ புரட்சி நடப்பது போன்று பரப்புகின்றனர். அவருக்குரிய கடமையை முறையாக செய்ய வேண் டும். தேவையற்றதை மக்களிடம் பேசி அவர் குழப்பம் செய்கிறார்.
கவுரவமிக்க ஆளுநர் பதவியை அவர் காப்பாற்ற வேண்டும். அரசியல்வாதி போன்று செயல்படுவதை தவிர்க்க வேண்டும். தமிழ் நாடு சட்டபேரவை கொண்டு வந்த ஏறக் குறைய 20 மசோதாக் களை ஆளுநர் கிடப்பில் போட் டுள்ளார். மாநில அரசின் முடிவை அவர் தடுப்பது மக்களை அவமதிக்கும் செயல். அமைச்சரவை தயாரித்த உரையிலுள்ள தகவல்களை வாசிக்க தவிர்த்ததால் அவருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா வழியில் வந்தவர். அப்படித்தான் எதிர்வினை யாற்றுவார். நாங்கள் தயாரித்த உரை பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு இங்கு வேலை யில்லை.

தேர்ந்தெடுத்த அரசுக்கு துணை நிற்கவே வந்துள்ளீர்கள். சட்டசபையில் ஆளுநர் வெளியேறிய நிகழ்வு எல்லா மாநிலங்களிலும் பேசப் படுகிறது. தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற நீங்கள் யார்? ஆளுநரை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டும். அய்ஏஎஸ், அய்பி எஸ் தேர்ச்சி பெற்றவர்களிடம் பேசிய ஆளுநர், ஒன்றிய - மாநில அரசுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால் ஒன்றிய அரசு பக்கமே இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். இவருக்கு முன் இருந்த ஆளுநர்கள் அமைதியாக சென்றனர்.
ஆளுநர் ஆர்என்.ரவி நிதானமாக செயல்பட வேண்டும். ஆளுநரின் நடவடிக்கைகள் அரசை தேர்வு செய்த மக்களை அவமதிக்கும் செயலாகும். தமிழ் மொழியே தெரியாத ஒருவர் எப்படி தமிழ் மொழியில் உள்ள குறைகளை கூற முடியும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. நாம் அனைத்து மதத்தினரையும் பொதுவாகத் தான் பார்க்க வேண்டும். நீதிபதிகளை மக்கள் பிரதிநிதிகள் மூலம் நீக்கம் செய்யும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. ஆனால் ஆளுநர்களை நீக்கம் செய்ய வழியில்லை. நியமனம் செய்தவர்களே திரும்பப் பெற வேண் டிய நிலை உள்ளது. எனவே ஆளுநர்களை நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் வகையில் சட்டத் திருத் தம் செய்யக்கோரி தனி நபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன். இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications