சந்திரபாபு நாயுடுவுக்கு பக்தியே கிடையாது.. இங்கே பாருங்க ஆதாரத்தை! போட்டோவுடன் வந்த ரோஜா
டைரக்ஷனில்
மதுரை: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடவுளுடன் விளையாடி வருகிறார். சுயநலத்திற்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் எதையும் அவர் செய்யவில்லை என்பதை மறைப்தற்காக தான் லட்டு விவகாரத்தை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் என்று நடிகையும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான ரோஜா மதுரையில் கூறினார்.
நடிகையும், ஆந்திரா முன்னாள் அமைச்சருமான ரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது நடிகை ரோஜா கூறியதாவது:-

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு கடவுள் என்றால் பயமும் இல்லை.. பக்தியும் இல்லை.. எப்போது எந்த பூஜை செய்தாலும் ஷூ அணிந்து கொண்டு தான் பூஜை செய்வார். (அப்போது பூஜை செய்யும் போது சந்திரபாபு நாயுடு ஷூ அணிந்துகொண்டு நிற்கும் படத்தை காண்பித்தார்). நீங்கள் எந்த படத்தை பார்த்தாலும் காலில் ஷூ அணிந்து இருப்பார். அவர்களுக்கு கடவுள் என்றால் பக்தியும் இல்லை, பயமும் இல்லை. புத்தி வராமல் அப்படியே திரும்ப திரும்ப தப்பு பண்ணுகிறார். அவர் வந்து ஜெகன் மோகன் ரெட்டி டார்கெட் பண்ணுவதாக நினைக்கிறார்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளுடன் விளையாடி வருகிறார். சந்திரபாபு நாயுடு சுயநலத்திற்காக எதையும் செய்கிறார். ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் எதுவுமே மக்களுக்கு செய்யவில்லை. இதை மறைப்பதற்கு தான் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டு விவகாரத்தை பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மார்ச் மாதத்திலேயே ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி முடிவடைந்துவிட்ட நிலையில், சர்ச்சைக்குரிய கண்டெய்னர்கள் ஜூலை மாதத்தில் தான் வந்திருக்கிறது என அறிக்கை வந்திருக்கிறது.
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருக்கும் போது தான் அந்த கண்டெய்னர் வந்திருக்கிறது. கண்டெய்னர் வந்தது, சாம்பிள் எடுக்கப்பட்டது எல்லாமே உங்க ஆட்சியில் தான் நடந்தது. ஜெகன்மோகன் ரெட்டியை ஜீரோ ஆக்க வேண்டும் என்னும் தவறான கண்ணோட்டத்துடன் நீங்க பேசியது தற்போது இந்த அறிக்கையின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
ஆந்திரா மட்டும் இல்லை.. இந்தியா மட்டுமில்லை.. உலகம் முழக்க வெங்கடேஷ்வர சுவாமியை பூஜை செய்கிறரவர்கள், பக்தியோடு பிரசாதமான லட்டுவை அதிர்ஷ்டமாக நினைத்து சாப்பிடுகிறார்களை எல்லாம் கன்பியூஸ் பண்ணி, இந்த சாமி மேல் இருக்கும் நம்பிக்கை மீது விளையாடும் அளவிற்கு தான் சந்திரபாபு நாயுடு தற்போது அரசியல் செய்கிறார்.
அவர்கள் எல்லாரும் பொய் பொய்யாக பேசுகிறார்கள். சந்திரபாபு நாயுடு டைரக்ஷ்னனில் பவன் கல்யாண் சொல்கிறார். ஏன் நந்தினி நெய் யூஸ் பண்ணல.. ஏன் கம்மியான ரேட்டில் நெய் யூஸ் பண்றீங்க என்று கேட்கிறார். 2014 - 2019 காலத்தில் ஆட்சியி இருந்தபோது 2014ம் ஆண்டு அக்டோபரில் நந்தினி நெய் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் 2015 ஆம் ஆண்டில் இருந்து நந்தினி நெய் ஏன் வாங்கவில்லை.
மத்தியிலும் உங்க கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. மாநிலத்திலும் உங்க ஆட்சி தான் நடக்கிறது. விசாரணை நடத்த வேண்டியது தானே. நாங்க எந்த விசாரணையும் பண்ணாதீங்க என்று எப்போதாவது சொல்லியிருக்கோமா?.. ஜெகன் சார் யாரை சேர்மனாக வைத்தாரோ அவங்க சுப்ரீம் கோர்டில் இது தொடர்பாக வழக்கு போட்டிருக்கிறாங்க. விசாரணை பண்ணுங்க.. குற்றவாளியை கண்டுபிடிங்க. அவங்களுக்கு தண்டனை கொடுங்க என்று சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு ரோஜா பேசினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications