வன்முறையை தூண்டும் காட்சிகள்.. மாநாடு படத்தை அரசு தடை செய்ய வேண்டும் - பா.ஜ.க.வின் வேலூர் இப்ராஹிம்
மதுரை: இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில், நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் கடந்த வியாழக் கிழமை தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவை அழைத்து பாராட்டி உள்ளார். இதேபோல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாநாடு படக்குழுவினருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வன்முறையை தூண்டும் மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க பிரமுகர் பேசியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:- மாநாடு திரைப்படத்தில் கோவை குண்டு வெடிப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது. காவல் துறையினரை தீவிரவாதிகள் போல சித்தரிக்கப்பட்டுள்ளது.
மத அடையாளங்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது. மாநாடு பட விவகாரத்தில் முதல்வர் தலைஈடு செய்ய வேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும். மாநாடு படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். படத்தை தடை செய்யவில்லை என்றால் பாஜக போராட்டம் நடத்தும்.
மேலும், படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் வீடு முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுள்ளது. முதல்வர் கையில் உள்ள காவல்துறை செயல்படாமல் உள்ளது. மிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜ.க புகார் கொடுத்தாலும் காவல்துறை சரியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. நகர்புற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். பொய் பிரச்சாரம் மூலம் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. திமுக ஆட்சிக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தும். இவ்வாறு வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications