ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்கு ஸ்பெஷல் ஏற்பாடா? ஸ்டாலினுக்கே பறந்த புகார்.. அதிகாரி மீது ஆக்சன்..பின்னணி
மதுரை: இன்று மதுரைக்கு வரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திற்காக சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட மதுரை உதவி ஆணையர் சண்முகம் மீது தமிழ்நாடு அரசு ஆக்சன் எடுத்துள்ளது. மதுரை மாநகராட்சி பணியில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இன்று மதுரைக்கு வரும் நிலையில், அவரின் வரவேற்பிற்காக சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் உத்தரவிட்டு இருந்தார். துணை ஆட்சியரான இவரின் உத்தரவு பெரிய சர்ச்சையானது.
மோகன் பாகவத் செல்லும் இடங்களை சுத்தம் செய்ய வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும், மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

சர்ச்சை
மதுரை சத்தியசாய் நகரில் சாய்பாபா கோவில் உள்ளது. கோவிலில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோகன் பாகவத் வருகிறார். இதற்காகவே இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்யும்படி சண்முகம் உத்தரவிட்டு இருந்தார். இவரின் இந்த உத்தரவு இணையம் முழுக்க நேற்று பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர் இல்லாத ஒருவருக்காக ஏன் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

திமுக
முக்கியமாக திமுகவினர் பலரும் அரசுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து இருந்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆதரவாக செல்ல வேண்டும் என்றால் ஏன் திமுக ஆட்சி என்று கூட சில திமுக நிர்வாகிகள் வெளிப்படையாக கேள்வி எழுப்பி இருந்தனர். அதோடு மதுரை சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் தொடங்கி பலர் இந்த அறிவிப்பை கடும் கேள்விக்கு உள்ளாக்கி இருந்தனர் .

எந்த உத்தரவு
அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும், என்று சு. வெங்கடேசன் வெளிப்படையாக கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பான புகார்கள் நேற்று முதல்வர் ஸ்டாலினுக்கே நேரடியாக சென்று இருக்கிறதாம்.

முதல்வர்
நேரடியாக திமுக மூத்த நிர்வாகி ஒருவர் முதல்வர் ஸ்டாலினிடம் இது பற்றி புகார் அளித்து இருக்கிறார். இந்த தொடர் புகார்களை தொடர்ந்து நேற்று இரவே மோகன் பாகவத்திற்காக சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட மதுரை உதவி ஆணையர் சண்முகம் மீது தமிழ்நாடு அரசு ஆக்சன் எடுத்துள்ளது. மதுரை மாநகராட்சி பணியில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆக்சன்
அதோடு இவர் தனது நியமன அலுவலர் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. திடீரென இப்படி ஒரு சர்ச்சைக்குரிய உத்தரவை வெளியிட்டதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications