Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 18 மாசம் டைம் கொடுங்க.. மதுரை முகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்.! பக்கா பிளானுடன் பிடிஆர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிடிஆர், மதுரையில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழக நிதித்துறை அமைச்சராக உள்ளவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். எதிர்க்கட்சிகள் குறித்த விமர்சனமாக இருந்தாலும் சரி, திமுக சாதனையாக இருந்தாலும் சரி புள்ளி விவரங்களை வைத்து எதிரில் இருப்பவர்களைத் திணறடித்து விடுவார்,

கடந்த 2016 முதலே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். 2021இல் நடைபெற்ற தேர்தலிலும் பெரியளவில் வெற்றி பெற்றார்.

மதுரை

மதுரை

மதுரையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான செல்லூர் ராஜு உள்ளிட்டோர் அமைச்சர் பிடிஆரை தொடர்ந்து விமர்சித்தே வருகின்றனர். மதுரையை திமுக புறக்கணிப்பதாகவும் நிதியமைச்சராக உள்ள பிடிஆரும் கூட தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மதுரைக்குத் தேவையான திட்டங்களை வாங்கிக் கொடுக்கவில்லை எனத் தொடர்ச்சியாகச் சாடி வருகின்றனர். இந்நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் பிடிஆர் பேசியுள்ளார்.

 அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

இன்று மதுரை தமிழ்ச்சங்க அரங்கில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சங்கம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தாளராக அமைச்சர் பிடிஆர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "வளர்ச்சி என்பது ஒரு பகுதிக்கு மட்டுமானதாக இருந்து விடக் கூடாது. இதற்காகத் தான் நிதி ஒதுக்கீடு மற்றும் தேவையான திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதன் மூலம் மாநிலத்தில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

 வளர்ச்சி

வளர்ச்சி

தங்கம், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால் மட்டும் நாட்டின் வளர்ச்சி உதவாது. அரசால் கூடச் செய்ய முடியாத தொழில் வளர்ச்சியைத் தொழில் முனைவோர்கள் எளிதாகச் செய்துவிட முடியும். இதற்காகத் தான் தமிழக அரசு சார்பில் "நான் முதல்வன் திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் இருக்கும் திறமையைக் கண்டுபிடித்து ஊக்குவிக்க முடியும்.

 எஸ்சி, எஸ்டி ஆணையம்

எஸ்சி, எஸ்டி ஆணையம்

தமிழ்நாட்டில் உள்ள எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் பணியாளர்களும் நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி அத்துறைக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 60 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ஊழியர்கள் உடன் எஸ்.சி, எஸ்.டி ஆணையம் இயங்கி வருகிறது" என்று தெரிவித்தார்.

 குஜராத் மாடல் வளர்ச்சி

குஜராத் மாடல் வளர்ச்சி

தொடர்ந்து மாநிலங்களின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், "குஜதார் மாடல் ஆட்சி எனச் சொல்கிறார்கள். குஜராத்தின் வருவாய் தமிழ்நாட்டின் வருவாயைவிட சில ஆயிரம் கோடி அதிகமாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் பிற மதிப்பீடுகளை நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் உள்ளனர். அதேநேரம் குஜராத்தில் 1000 பேருக்கு 1 டாக்டர் மட்டுமே உள்ளனர்.

 உயர் கல்வி

உயர் கல்வி

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 80% பெண்கள் உயர் கல்வி பயின்றவர்களாகவே உள்ளனர். ஆனால் குஜராத்தில் வெறும் 60%க்கும் குறைவாகவே உயர்கல்வி படித்தவர்களாக உள்ளனர். இப்படி பல்வேறு மதிப்பீடுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். அனைத்திலும் தமிழ்நாடு சிறப்பாகவே உள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரி மாநிலமாக உள்ளது..

தமிழ்நாடு

தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடு பொருளாதாரத்தில் பின்தங்கத் தொடங்கியது. தற்போது இரண்டு ஆண்டுகளாகத் தான் மாநிலம் சரியான திசையில் செல்ல தொடங்கி உள்ளது. மதுரையில் வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக முதலீட்டுத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்து 18 முதல் 24 மாதங்களில் மதுரையின் முகமே நிச்சயம் மாறும்" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+