• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பொய்யின் மறு பெயர்தான் ஸ்டாலின்.. முதல்வருக்கு பெருகும் செல்வாக்கை பொறுக்க முடியல.. அமைச்சர் கிண்டல்

|

மதுரை: பொய்யின் மறுபெயர் ஸ்டாலின்... முதல்வருக்கு பெருகும் செல்வாக்கை பொறுக்க முடியவில்லை அவரால்.. இப்படியே போனால், எங்கே மக்கள் நம்மை மறந்துவிடுவார்களோ என்று நினைத்து தினம் தினம் பொய், பொய்யா அறிக்கை வெளியிடுகிறார்" என்று தமிழக அமைச்சர் ஆர்பி உதயகுமார் திமுக தலைவர் குறித்து காட்டமான ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் உள்ளது காடனேரி என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் மக்களுக்கு அம்மா பேரவை சார்பில் கபசுர குடிநீர் பொடி பாக்கெட், முகக்கவசம், ரஸ்க் பாக்கெட்டுகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசும்போது, கொரோனா செயல்பாட்டில் முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார் என்று புகழாரம் சூட்டியதுடன், திமுக தலைவர் ஸ்டாலினால் இதை பொறுத்து கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்தார்.. அமைச்சர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்டி அரசுவுக்கு கொரோனா உறுதி.. சென்னையில் சிகிச்சை செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்டி அரசுவுக்கு கொரோனா உறுதி.. சென்னையில் சிகிச்சை

 தொற்று

தொற்று

"இந்த வைரஸ் நோயிலிருந்து மக்களை காக்க, நம் முதல்வர் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ராத்திரி, பகல் என்று பாராமல், ஊண், உறக்கமும் இல்லாமல், தமிழக மக்களை தொடர்ந்து கண்காணித்து தீர்க்கதரிசனமாக ஏராளமான முடிவுகளை எடுத்து வருகிறார்.. அதனால்தான் இந்த தொற்றினால் குணம் அடைந்தவர்களும் நம் தமிழகத்தில்தான் அதிகம்.. இந்த தொற்றினால் இறப்பு சதவீதமும் நம் தமிழ்நாட்டில்தான் குறைவு.

 மாஸ்க் போடணும்

மாஸ்க் போடணும்

இந்த கொரோனா காலத்திலும் தன்னை பற்றி கூட கவலைப்படாமல் மக்களை காப்பதில் முதன்மையாக இருக்கிறார்.. இதை மக்களே மனசார பாராட்டி வருகிறார்கள்.. அது மட்டுமில்லை, முதல்வர் திருச்சிக்கு போய்விட்டு திரும்பி வரும்போது, அங்கே வழியில் நின்றிருந்த ஊர்மக்களிடம் சென்று பேசினார்.. "எல்லாரும் மாஸ்க் போடணும்.. கையை சோப்பு போட்டு கழுவணும்" என்று அறிவுறுத்தினார்.. இப்படி கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு கவசமாக நம்முடைய முதல்வர் திகழ்கிறார்.

 அரசியல் செய்கிறார்கள்

அரசியல் செய்கிறார்கள்

அதனால்தான் இன்னைக்கு மக்கள் சக்தி பெற்ற தலைவராக முதல்வரும், துணை முதல்வரும் திகழ்ந்து வருகின்றனர்.. ஆனால், இதையெல்லாம் எதிர்க்கட்சிகளால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை.. மக்களை பத்தி எந்த கவலையும் படாமல், அரசை குறை சொல்லி கொண்டு இருக்கிறது.. கொரோனா காலத்திலும் அரசியல் செய்ய நினைக்கின்றனர்.

  விளம்பரத்திற்காக நிவாரண பணிகளை மேற்கொள்ள வைத்து ஒரு MLA-வை இழந்தது திமுக- முதல்வர்
   பொய்யான அறிக்கைகள்

  பொய்யான அறிக்கைகள்

  ஆனால், எந்த சூழ்ச்சியும் பலிக்கவில்லை.. முதல்வருக்கு பெருகும் செல்வாக்கை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.. இப்படியே சென்றால் மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள் என்று ஸ்டாலின் தினம் தினம் பொய்யான அறிக்கையை வெளியிடுகிறார்.. இப்படியே போனால், பொய்யின் மறுபெயர் ஸ்டாலின் என்று மக்களே சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்" என்றார்.

  English summary
  TN minister RB Udhayakumar slams dmk leader mk stalin
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X