ஒருகணம் தாமதித்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம்... விபத்தை விசாரிக்க சென்ற காவலரே விபத்தில் பலி
மதுரை: மதுரையில் போக்குவரத்து புலனாய்வு தலைமை காவலர் ஒருவர் அஜாக்கிரதையாக சாலையின் மையத்தடுப்பில் மோதி கீழே விழுந்ததில் எதிரில் வந்த அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. போக்குவரத்து சாலை விபத்துகளை விசாரிக்கும் காவலரே அலட்சியமாக ஒருகணம் யிடப்பட்டுள்ளது. சிந்திக்காமல் செயல்பட்டதால் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
Recommended Video
மதுரை திருமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (42) போக்குவரத்து காவல் துறையில் விபத்துகளை கவனிக்கும் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சின்ன உடைப்பு பகுதியில் நடந்த விபத்து குறித்து விசாரணை நடத்த டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது மண்டலே நகரிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.

அப்போது மண்டலே நகர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து முன் சக்கரம் அவர் மீது ஏறியதில் பலத்த காயம் அடைந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
ஒரு நிமிடம் தாமதமாக சென்றிருந்தால் கூட அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் விதி, விபத்து குறித்து விசாரணை நடத்த சென்ற காவலரே சாலை விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது போன்று சாலை விபத்துகள் நிறைய நடக்கின்றன. கரணம் தப்பினால் மரணம் எனும் அளவுக்கு ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. வாகனத்தை இயக்கும் நபர்களுக்கு பொறுமை என்பது மிகவும் அவசியமானதாகும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கேற்ப பொறுமையோடு சென்றால் இது போன்ற இக்கட்டான சூழல்களில் இருந்து நாம் தப்பிக்கலாம்.
அவசரம், வேகம், கவனக்குறைப்பு உள்ளிட்டவைகளால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குண்டும் குழியுமான சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் இவை அதிகம் ஏற்படுகின்றன. அதிகம் விபத்து நடைபெறும் பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலகைகளை பொருத்த வேண்டும். சாலை வரிகளை வசூலிக்கும் போது அவற்றை தரமானதாக கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.












Click it and Unblock the Notifications