மதுரையில் அக்டோபர் 1 முதல் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்.. போலீஸார் அறிவிப்பு
மதுரை: மதுரையில் அக்டோபர் 1 முதல் 26 ஆம் தேதி வரை சில முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மதுரை மாநகரப் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றம் ஏன்? : மதுரை செல்லூர் தத்தனேரி ரயில்வே மேம்பாலத்தில் பாலம் இணைக்கும் பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் இருமார்க்கமும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்டோபர் 1ம் தேதி முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பேருந்துகள் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது புறம், குரு தியேட்டர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ஆரப்பாளையம் செல்ல வேண்டும்.
கோரிப்பாளையம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஏவி பாலம் யானைகள் சந்திப்பு, சிம்மக்கல் ரவுண்டானா, தமிழ்ச்சங்கம் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும்.
இதேபோல் மறுமார்க்கமாக தமிழ்ச் சங்கம் ரோடு, சிம்மக்கல் ரவுண்டானா, யானைகள் சந்திப்பு, புது பாலம் சந்திப்பு வலது புறம் திரும்பி, கோரிப்பாளையம் சந்திப்பை அடையலாம்.
திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் அத்தியாவசிய கனரக வாகனங்கள் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது, குரு தியேட்டர் சந்திப்பு, காளவாசல் சந்திப்பு இடது, அரசரடி சந்திப்பை அடைந்து தமிழ்ச் சங்கம் ரோடு வழியாக வரலாம்.
இதேபோல் பாத்திமா கல்லூரி சந்திப்பு இடது, கூடல் நகர் ரயில்வே மேம்பாலம், ஆனையூர், ஐயர் பங்களா சந்திப்பு, பொது நத்தம் சாலை வழியாகவும் மற்றும் மூன்று மாவட்ட சந்திப்பு, அழகர் கோவில் சாலை வழியாகவும் கோரிப்பாளையம் செல்லலாம்.
திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்களான இலரகு நான்கு சக்கர வாகனங்கள் செல்லுர் பாலம் வரும் வரை எந்த மாற்றமும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம், தத்தனேரி சப்வே வழியாக பாலம் ஸ்டேஷன் ரோட்டை அடைந்து கோரிப்பாளையம் பகுதிக்கு போகலாம்.
மறு மார்க்கமாக கோரிப்பாளையம் சந்திப்பில் இருந்து செல்பவர்கள் செல்லூர் பாலம் வரை எந்த மாற்றமும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் அடியில் சர்வீஸ் சாலையில் சென்று சப்வே வழியாக தத்தனேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வைகை வடக்கரை சாலையை அடைந்து அம்மா பாலம் சந்திப்பு வழியாக செல்லலாம்" இவ்வாறு மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
