தவெக கூட்டணிக்கு செல்லாதது ஏன்?.. இதுதான் காரணம்.. டிடிவி தினகரன் விளக்கம்
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்துக்கு தான் வர வேண்டும் என்று செங்கோட்டையன் விரும்பினார். அதனை மறுக்க முடியாமல் தயக்கத்தில் இருந்தேன். நான் அதிமுக கூட்டணிக்குச் செல்ல மாட்டேன் என்று செங்கோட்டையன் நம்பிக் கொண்டிருந்தார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு நான் வருவேன் என செங்கோட்டையன் நம்பினார். அதை நான் மறுக்கவில்லை. தவெகவுக்கு வர வேண்டும் என்ற செங்கோட்டையனின் விருப்பத்தை மறுக்க முடியாமல் இருந்தேன். நான் மறுக்க முடியாமல் தயக்கத்தில் இருந்தேன். பார்ப்போம் என்று கூறியிருந்தேன். நான் அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என செங்கோட்டையன் நம்பிக் கொண்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி விருப்பம்
அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வெளியில் வந்த செங்கோட்டையனை சேர்ந்துகொண்டுள்ளார். இது என்ன நிலை என எனக்குப் புரியவில்லை. அம்மா ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என நட்பு ரீதியாக அதிமுகவினர் அழைத்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமமுக தங்கள் கூட்டணியில் வர வேண்டும் என விருப்பப்பட்டார்.
அரசியல் என்பது சதி நிறைந்த துறை. நான் ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தவன். ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதற்காகத்தான் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றேன். ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் என்னை சந்தித்தார். அரசியல் ரீதியாக வரவில்லை. எனக்கு நல்ல நண்பர். மீண்டும் வந்து சந்திப்பதாக கூறிச் சென்றிருக்கிறார்.
எனக்கு சரிவராது..
ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக கூட்டணிக்குச் சென்றேன். எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தர முடியாது. செங்கோட்டையனும் பலமுறை டெல்லி சென்றார். அவருடன் டெல்லியில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அதிமுக கூட்டணியில் சேருவதாக செங்கோட்டையனிடம் கூறினேன். அது எனக்கு சரிவராது என அவர் கூறினார்.
ஓபிஎஸ் திமுகவுக்கு செல்வாரா..
திமுக எப்படி எங்களுக்கு சரிவரும், அதிமுகவால், ஜெயலலிலதாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். மூன்று முறை அதிமுக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் எப்படி திமுகவுக்கு போவார். என்னால் ஒருபோதும் திமுகவுக்கு போக முடியாது. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. சகோதரர்கள் சண்டையிட்டு பிரிவதும், சேர்வதும் இயல்பு. கட்சியும் குடும்பம் மாதிரிதான்.
கூட்டணி ஆட்சியும் சாத்தியம்
எங்களை பார்ப்போரெல்லாம் ஒற்றுமையாக இருங்கள் என்றே கூறுகின்றனர். கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமே. நிபந்தனை இல்லை. நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை. ஆனால், கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் நிலவி வருகிறது.
ஒன்றாகிய அதிமுக, அமமுக
அதிமுக கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மேலும் சிலர் வருவார்கள் என்று நம்புகிறேன். எங்களை சந்திக்கும் பொதுமக்கள், எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என்றே கூறி வந்தனர். கூட்டணியில் நாங்கள் நியாயமான கோரிக்கைளைத் தான் வைப்போம் என்று அவர்களுக்குத் தெரியும். அதிமுக, அமமுக தொண்டர்கள் ஜெல் ஆகிவிட்டோம்.












Click it and Unblock the Notifications