3 பேரை கல்யாணம் செய்து ஏமாற்றிய மதுரை இளம் பெண்.. 38 வயதில் திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கடம்பூர் பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவர் தனது மனைவி மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். தனது மனைவி மதுரையைச் சேர்ந்தவர் என்றும் 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு மதுரை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புகாரில் கூறிய தகவல்களை பார்ப்போம்.

தாமதமாக திருமணம் செய்வோர், பெண் கிடைத்தால் போதும் என்று திருமணம் செய்துவிடாதீர்கள்.. அப்படி திருமணம் செய்தால், பின்னாளில் வில்லங்கம் வர வாய்ப்பு உள்ளது. இன்றைய 90ஸ்கிட்ஸ் பலர், திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அவதிப்படும் நிலையில், அவர்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிப்பது அடிக்கடி நடக்கிறது. இதுபற்றி செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மதுரை பெண் மீது புகார் எழுந்துள்ளது.

madurai tuticorin marriage

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கடம்பூர் பகுதியை சேர்ந்த 38 வயதாகும் திருப்பதி , நேற்று மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வழக்கறிஞர்களுடன் வந்தார். அங்கு மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனை சந்தித்து தனது மனைவி குறித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் திருப்பதி கூறுகையில், "நான் 13 ஆண்டுகளாக துபாய் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தேன். 38 வயது ஆகியும் திருமணமாகாமல் இருந்தது. இதனால் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை உறவினர்கள் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டேன். அவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் படித்திருப்பதாகவும், தன்னுடைய முதலாவது கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் மூலம் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவரது பெற்றோர் கடந்த 2023-ம் அண்டு அக்டோபர் மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். வரதட்சணை வாங்காத நிலையில் திருமண செலவுகள் அனைத்தையும் நான் தான் ஏற்றுக்கொண்டேன். எங்களுடைய 15 பவுன் நகையையும் மனைவியிடமே கொடுத்து வைத்திருந்தேன். 3 மாதம் அவருடன் வாழ்ந்த நிலையில் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டேன்.

அங்கிருந்து எனது மனைவியிடம் தொடர்பு கொண்ட போது என்னிடம் அவர் சரிவர பேசவில்லை. இதனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதனால் வேலை பார்க்கும் போது கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினேன். பின்னர் எனது மனைவியை தேடி ஊருக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிக்கும்போது என்னுடனான திருமணத்தை மறைத்து 3-வதாக ஒருவரை அவர், திருமணம் செய்து சென்னையில் வாழ்ந்து வருவது தெரியவந்தது.

இதுபற்றி விசாரித்த போது அவரது முதல் கணவர் கார்த்திக் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் எனக்கு வந்தது. ஆனால், தற்கொலை செய்து கொண்டதாக என்னிடம் நாடகமாடினர். அந்த பெண்ணின் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு அவரது பெற்றோர், உறவினர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். எனவே ஏமாற்றி 3 திருமணங்களை செய்து நகை பணத்தை அபகரித்து சென்ற பெண், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரது முதல் கணவர் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்"
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை பெற்று கொண்ட மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+