Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘விஜய் எப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பார்?’ - டிஸைன் டிஸைனாக உருட்டும் தவெகவினர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்த தவெக தேர்தல் பணிகளில் மந்தமாக உள்ளனர். மறுபக்கம் விஜய் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். சமீபத்தில் கூட ஆங்கில ஊடகத்திற்கு விஜய் ஆஃப் கேமரா அடிப்படையில் நேர்காணல் வழங்கியது சர்ச்சையானது. விஜய் எப்போது செய்தியாளர்களைச் சந்திப்பார் என்கிற கேள்விக்கு தவெகவின் மூத்த நிர்வாகிகள் அருண்ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்டோர் சொல்லியே அடேங்கப்பா பதிலால் தவெகவினரே அதிர்ச்சியாகியுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. மற்ற கட்சிகளில் டாப் கியரில் பறந்து கொண்டிருக்கிறார்கள். தவெக இன்னும் டேக் ஆஃப் ஆகவில்லை. அரிதாக வெளியில் தலைகாட்டி வந்த தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகுவெளியில் தலை காட்டுவது அரிதிலும் அரிதாகிவிட்டது.

tvk vijay press meet

விஜய் எப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பார்

தவெக வின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இந்த 3 வருடங்களில் விஜய் ஒருமுறை கூட செய்தியாளரை சந்திக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பை விஜய் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். சமீபத்தில் கூட ஆங்கில ஊடகத்திற்கு கேமரா இல்லாமல் ஆஃப் கேமரா என்கிற நேர்காணலை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஊடகங்களை சந்திக்க விஜய் பயப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதற்கு தவெக நிர்வாகிகள் அளிக்கும் பதில் இன்னும் மோசமாக உள்ளது. தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராஜ்மோகன், "நீங்கள் எல்லாம் யார். நான் சந்திக்க கூடாதா. நான் விஜய். இவங்க விஜய், அவர் விஜய்.. இந்தம்மா விஜய்,. இங்குள்ள அனைவருமே விஜய்" என்று அருகில் இருந்தோரை குறிப்பிட்டார்.

ராஜ்மோகன், அருண்ராஜ் பகீர்

தொடர்ந்து பேசிய அவர், 'நாங்கள் எல்லாம் ஏழை எளிய வீட்டு பிள்ளைகள். சாதாரண ஆட்களும் மேடையேற வேண்டும், பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்கிற அரிய வாய்ப்பை கொடுத்துள்ளனர். இது குடும்ப கட்சி கிடையாது. சரியான சந்தர்ப்பத்தில் அதுவும் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.

தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் மரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூட்டணி நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம். எங்கள் தலைவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறியிருக்கிறோம். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை முதல் மாநாட்டிலேயே சொல்லியுள்ளோம். இதை ஏதோ கூட்டணி அழைப்புக்காகவோ, கூட்டணியை சார்ந்திருக்கிறோம் என்பதற்காக சொல்லவில்லை.

முதலமைச்சருக்கு கேள்வி

இது எங்கள் கொள்கை சார்ந்த முடிவு. அதிகார பகிர்வு இருக்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டு, எப்போது ஒரு தலைவர் வருவார் என்ற ஏக்கத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் மிகப்பெரிய ஜனநாயக புரட்சி ஏற்படும். கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவு செய்வார். அதை பொதுவெளியில் பேச முடியாது.

அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கித்தான் கேள்வி எழுப்ப வேண்டும். முதலமைச்சர் எப்போது உண்மையான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறாரோ, அதற்கு அடுத்த நாள் எங்கள் தலைவர் செய்தியாளர்களைச் சந்திப்பு நடத்துவார். உங்களால் முதலமைச்சரை அணுக முடியுமா. அவருக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க துணிவு இருக்கிறதா" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+