டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறும் தவெக மதுரை மாநாட்டு திடல்.. மகனின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த தொண்டர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடக்கவுள்ள தவெகவின் 2வது மாநில மாநாடு திடல் பொதுமக்களின் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் 100க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு நாளும் மாநாடு ஏற்பாடுகளைக் கண்டு செல்ஃபி எடுத்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனிடையே விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் தனது மகனின் பிறந்தநாள் கேக்கை வெட்டுவதற்காக சாத்தூரில் இருந்து மாநாடு திடலுக்கு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடக்கவுள்ளது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள எலியார்பத்தியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாடு திடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சுத்தம் செய்யும் பணிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மாநாடு மேடை அமைக்கப்பட்டு தயாராக உள்ளது.

TVK Madurai Maanadu Ground becomes a Selfie Spot

தற்போது தொண்டர்கள் அமர்வதற்கு ஏதுவாக மாநாட்டின் திடல் பிடிக்கப்பட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மாநாட்டுக்கான வழி, வாகனங்களை பார்கிங் செய்வதற்கான வசதிகள், சாப்பாடு அளிப்பதற்கான இடம், தண்ணீர் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விக்கிரவாண்டி மாநாட்டை விடவும் ஒரு படி கூடுதல் பிரம்மாண்டத்துடன் மதுரை மாநாட்டை நடத்துவதில் தவெக தீவிரமாக உள்ளது.

இதற்காக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒவ்வொரு வாரமும் வந்து தவெக மாநாட்டு திடலைப் பார்வையிட்டு செல்கிறார். இந்த மாநாடு தவெகவுக்கு தென் மாவட்டங்களில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேடையிலேயே தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட விஜய் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே தவெக மாநாட்டு திடல் மதுரையில் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் தங்களின் வாகனங்களில் பயணிக்கும் பலரும் தவெக மாநாட்டு திடலை பார்வையிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்டோர் மாநாட்டுத் திடலைப் பார்வையிட்டு அங்கு செல்ஃபி எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனது மகனின் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்காக சாத்தூரில் இருந்து சுமார் 60 கிமீ பயணித்து மதுரையில் நடைபெறவிருக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுத் திடலுக்கு வந்து விஜய் ரசிகர் கேக் வெட்டிய இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வசந்தன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஞானவேல்.

இவர் தனது ஐந்து வயது மகன் புனிதனின் பிறந்தநாள் தினத்தன்று பிறந்தநாள் கேக் வெட்டுவதற்காக சாத்தூரிலிருந்து மதுரை எலியார்பத்தி பகுதியில் உள்ள தவெகவின் 2வது மாநில மாநாடு திடல் பகுதிக்கு வருகை தந்து கேக் வெட்டினார். பின்பு மாநாட்டுப் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு கேக் வழங்கினார். இந்த வீடியோ தவெக தொண்டர்கள் மத்தியில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+