கொடுமை.. விஜய்யின் பிரச்சார வாகனத்தை பிடித்து தொங்கிய தொண்டர்கள்.. காலால் மிதித்த பவுன்சர்!
சிவகங்கை: காரைக்குடிக்கு தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்த போது, அவரது பிரச்சார வாகனத்தில் தொங்கி கொண்டு வந்த தவெக தொண்டர்களின் கைகளை பவுன்சர்கள் காலால் எட்டி மிதித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த வீடியோ சோசியல் மீடியாவிலும் அதிகமாக டிரெண்டாகி வருகிறது.
சட்டசபைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். நேற்று முன்தினம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். அதனையொட்டி சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் வந்தார் விஜய்.

அங்கு தவெக நிர்வாகிகள் விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து பிரச்சார வாகனத்திலேயே விஜய் காரைக்குடிக்கு புறப்பட்டார். அப்போது வழியெங்கும் தவெக நிர்வாகிகளும், விஜய் ரசிகர்களும் அவரை காண குவிந்தனர். இதனால் மதுரையிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் விஜய்யை வாகனங்களில் பலரும் பின் தொடர தொடங்கினர்.
அதேபோல் விஜய்யின் வாகனத்திற்கு அருகே சென்று அருகில் பார்க்க வேண்டும் என்று பலரும் ஆவலுடன் இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் விஜய்யின் பிரச்சார வாகனத்திலேயே தவெக தொண்டர்கள் ஏறத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய்யின் பாதுகாவலர்கள் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் பிரச்சார வாகனத்தில் தொங்கியபடி இருந்த தொண்டர்களை, பவுன்சர்கள் காலால் எட்டி மிதிக்க தொடங்கினர். இது தவெக தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவெக தொண்டர்களை ஷூ காலால் பவுன்சர்கள் எட்டி மிதிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
ஏற்கனவே விஜய்யின் ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் ஏதாவது ஒரு அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. நெல்லை பிரச்சாரத்தின் போது கூட விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த 11 பேர் காயம் அடைந்தனர். அதற்கு முன்பும் ஏராளமான பிரச்சாரங்களில் அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. இருந்தும் விஜய் ரசிகர்கள் அவரை பின் தொடர்வது வாடிக்கையாகி வருகிறது.
-
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications