காவி இருக்க வேண்டிய இடத்தில் இருக்கனும்.. கையில் சிக்கினால் அடிதான்.. கொந்தளிக்கும் செல்லூர் ராஜூ!
மதுரை: மதுரையில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் சிலைக்கு காவி கொடியை போட்டவர்கள் கைகளில் கிடைத்தால், அடி நொறுக்கிவிடுவோம் என்றும், காவி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரவை பகுதியில் புதிய குளியல் தொட்டி, சுகாதார வளாகம், மின் மோட்டார் அமைப்பதற்கான பூமி பூஜை, சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ கூறுகையில், மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி கொடியை போட்டு அவமானப்படுத்தியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். எம்ஜிஆர் சமூகநீதித் தலைவர். அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவர் இழிபிறவி என்பேன். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கொரோனா பரவல்
இதனைத் தொடர்ந்து திமுக அரசு மேற்கொள்ள உள்ள கொரோனா முன்னெச்சரிக்கை பணி குறித்த கேள்விக்கு, அதிமுக ஆட்சியில் காலத்திலேயே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிட்டோம். தற்போது கட்டிய வீட்டில் திமுக அரசு குடியேறியுள்ளது. எனவே கொரோனா தொடர்பான பிரச்னையை ஏற்கனவே வைத்துள்ள உபகரணங்கள், படுக்கை வசதி உள்ளிட்டவை மூலம் முறையாக கவனித்தால் போதும் என்று தெரிவித்தார்.

இபிஎஸ் பங்கேற்பாரா?
தொடர்ந்து மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா என்பது தெரிய வரும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினை இல்லை என்றால் பங்கேற்பார் என்று தெரிவித்தார்.

காலம் இருக்கிறது
முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு குறித்த கேள்விக்கு, இது தொடர்பான பணி 2023 ஆண்டிற்குள் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி பணிகள் நிறைவடையவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி கடும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

செல்லூர் ராஜூ தவிர்ப்பு
பின்னர் அதிமுக குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, அதிமுக தொண்டர்களை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்று கூறிவிட்டு, அதிமுக மற்றும் ஓபிஎஸ் தொடர்பான கேள்விகளை தவிர்த்தார்.

திமுக ஆட்சி
தொடர்ந்து திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது. மக்களுக்கு என்ன தேவை என்ற கேள்வியை முன் வையுங்கள் என்று பத்திரிகையாளர்களுடன் ஆவேசமாக வாதிட்டார். திமுக ஆட்சி பற்றிய பேசிய செல்லூர் ராஜூ, கருணாநிதி கதை வசனம் எழுதினார், ஸ்டாலின் நன்றாக பேசுகிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

உதயநிதி செய்தது என்ன?
அதேபோல் உதயநிதி ஸ்டாலினை காக்கா பிடிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி ஸ்டாலினின் பெயரை வைத்து வருகிறார். உதயநிதி நாட்டுக்கு இதுவரை என்ன செய்துள்ளார்? நயன்தாராவை கட்டிப்பிடித்ததும், ஹன்சிகாவை காதல் செய்ததையும் மட்டும் தான் உதயநிதி செய்ததாக கூறிவிட்டு வேகமாக புறப்பட்டார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications