Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் விருந்துக்கு வந்த இடத்தில் புதுப்பெண் தேவிஸ்ரீ... கல்யாணமான ஒரு மாதத்தில் இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருமணம் ஆன புதிதில் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று.. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் அந்த காலக்கட்டத்தில், கணவன் குடும்பத்தை பற்றி மனைவிக்கும், மனைவி குடும்பத்தை பற்றி கணவனுக்கும் தெரியவரும். அப்போது ஈகோ பார்க்காமல் இருவரும் விட்டுக்கொடுத்து, ஒருவருக்காக ஒருவர் துணை நின்றால் பிரச்சனை வராது. மாறாக முறிக்கி கொண்டு நின்றால் சிக்கலாகும். மதுரையில் விருந்துக்கு வந்த இடத்தில் புதுப்பெண் எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது,

திருமணத்திற்கு பின்னர் முதல் இரண்டு ஆண்டுகள் கணவன் மனைவி இடையே பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்படும். அதேபோல் புதிதாக திருமணம் ஆகி வந்த பெண்ணுக்கு கணவன் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் புரிய காலம் எடுக்கும். அதேபோல் மனைவி குடும்பத்தினரை புரியவும் கணவனுக்கு காலம் எடுக்கும்.. அப்படியான சூழலில் கருத்து வேறுபாடு அல்லது சண்டை வரும் போது, இருவருமே மனம் விட்டு பேசி தீர்க்க வேண்டும்.

What did the newlywed bride Devisri do while attending a feast in Madurai

சண்டைக்கு யார் காரணமோ, அவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.. கணவன் மனைவி இருவருமே வார்த்தைகளை கவனமாக விட வேண்டும்.. அப்படி இல்லாமல் மனம் போன போக்கில் அடக்கி ஆள நினைத்தால் சிக்கல் ஆரம்பம் ஆகும். திருமணம் ஆன புதிதில் சில எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் ஆகும். அப்படி ஏமாற்றம் நடந்தால், அதனை பக்குவமாக கையாள வேண்டும். அதனைவிட்டுவிட்டு தவறான முடிவு எடுக்கக்கூடாது.. மதுரையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

மதுரை அருகே பரவை மேலவெளி வீதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு ஒரு மகனும்,19 வயதில் தேவிஸ்ரீ என்ற மகளும் உண்டு. இதில் தேவிஸ்ரீ மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பரவை அருகே அதலை கிராமத்தைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் மகன் வக்கீல் புஷ்பவனம் (28) என்பவருக்கும் தேவிஸ்ரீக்கும் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி திருமணம் நடந்தது.

பின்னர் புஷ்பவனம்-தேவிஸ்ரீ தம்பதி, மாமானார் வீட்டிற்கு விருந்து வந்தார்கள். அதன்படி பரவையில் உள்ள தேவிஸ்ரீயின் தந்தை மூர்த்தி வீட்டுக்கு விருந்துக்கு வந்ததாகத் தெரிகிறது. நேற்று முன்தினம் காலையில் புஷ்பவனம், மாமனார் வீட்டில் இருந்து கோர்ட்டுக்குச் சென்று விட்டார். தேவிஸ்ரீயும் கல்லூரிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தேவிஸ்ரீயிடம் அவருடைய தாயார் வசந்தா, கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றாராம்.

சிறிது நேரத்தில் வசந்தா திரும்பி வந்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் கதவைத் தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், மூர்த்திக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக விரைந்து வந்த மூர்த்தி, முன்வாசல் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு, தேவிஸ்ரீ மயங்கிய நிலையில் கிடந்தாராம். இதைப் பார்த்து அவர் அலறினார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவிஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், தேவிஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Election 2026

முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+