Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் இளைஞர் மீது 5 பேரை ஏவிய இளம்பெண்.. மாட்டுத்தாவணி சம்பவத்தின் அதிர வைக்கும் பின்னணி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவர் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி தீர்த்துக் கட்டியது. இந்த விவகாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் பொது இடத்தில் தன்னை அவமானப்படுத்தியதால் 5 பேரை ஏவி தொழிலாளி இளம் பெண் தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் தங்கப்பாண்டி என்பவர் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தங்கப்பாண்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்பு மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 6 பேர் கும்பல் தங்கப்பாண்டியை ஓட, ஓட விரட்டி குத்திக்கொலை செய்தது. பின்னர் அந்த ஆறு பேர் கும்பல் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. தகவல் அறிந்து வந்த மாட்டுத்தாவணி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

What happened to Thangapandi at the Madurai Mattuthavani market because of a young woman

முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக இளம்பெண் சிவப்பிரியா மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவலின் படி, மாட்டுத்தாவணியில் கொலை செய்யப்பட்ட தங்கப்பாண்டி மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளார்கள்.

இவர்களுக்கும் செல்லூரைச் சேர்ந்த பிரதாப் மற்றும் அவரது சகோதரர் தரப்பினருக்கும் இடையே, கோவில் திருவிழாவின் போது தங்கப்பாண்டியின் இருசக்கர வாகனத்தை எரித்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. மேலும் பிரதாப் சிவப்பிரியாவை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில், பிரதாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு தங்கப்பாண்டியும், ஆனந்தும் தான் காரணம் என கருதிய சிவப்பிரியா, பிரதாப்பின் சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதாப்பின் சகோதரரை, தங்கப்பாண்டியும், ஆனந்தும் சேர்ந்து அவ்வப்போது மிரட்டி வந்துள்ளார்களாம். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவில் சிவப்பிரியாவிடம், தங்கப்பாண்டியின் உறவுப்பெண் ஒருவர் பேசியிருக்கிறார். அதைப் பார்த்த தங்கபாண்டி மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும், உறவுக்கார பெண்ணை அழைத்து, சிவப்பிரியா முன்பாகவே அவர் நல்ல பெண் இல்லை. அவரிடம் பேசாதே என்று கூறினாராம். மேலும் மேலும் சிவப்பிரியாவையும் பொதுஇடத்தில் வைத்து அவமானப்படுத்தியதுடன், எச்சரித்துச் சென்றார்களாம்.

இதனைதொடர்ந்து பிரதாப்பின் சகோதரரிடம் சென்ற சிவப்பிரியா, தன்னை தங்கப்பாண்டி பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்திவிட்டதாக அழுதுகொண்டே கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த பிரதாப்பின் சகோதரர், தங்கப்பாண்டியையும், ஆனந்தையும் கொலை செய்ய திட்டம் தீட்டி, தனது நண்பர்கள் மற்றும் சிவப்பிரியாவுடன் சேர்ந்து தேடி வந்துள்ளனர்.

முதலில் ஆனந்தின் வீட்டை சிவப்பிரியா அடையாளம் காட்டிய நிலையில் அங்கு விசாரித்தபோது, ஆனந்த் அங்கு இல்லாததால் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டுக்கு சென்று தங்கப்பாண்டியை தேடியிருக்கிறார்கள். அப்பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த தங்கப்பாண்டியை பார்த்ததும், அவரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து கொலை வழக்கில் பிரதாப்பின் காதலி சிவப்பிரியா (19), பிரதாப்பின் தம்பி, சிறுவர்கள் என 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தன்னை அவமானப்படுத்திய ஆத்திரத்தில் இந்த 5 பேரையும் சிவப்பிரியா ஏவியதன் பேரில், இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+