"அடேங்கப்பா.. என்ன ஸ்பீட்!" விறுவிறுப்பாக நடக்கும் மதுரை மெட்ரோ பணிகள்! எப்போது பயன்பாட்டிற்கு வரும்
மதுரை: சென்னையைப் போலவே மதுரையில் மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவித்தனர். இதனிடையே மதுரை மெட்ரோ குறித்து சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வளர்ச்சி, வாகன பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிக முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது.
என்ன தான் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டினாலும் கூட, பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தினால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

மெட்ரோ: இதில் மெட்ரோவுக்கு முக்கிய பங்கு இருக்கவே செய்கிறது. தமிழ்நாட்டில் இப்போது தலைநகர் சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.. கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னையில் நீல மற்றும் பச்சை என்று இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவை இயங்கி வருகிறது. டிராபிக்கில் நிற்கத் தேவையில்லை, கட்டணம் குறைவு இதில் ஏசி வசதி வேறு எனப் பல காரணங்களால் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இப்போது விம்கோ நகர் முதல் விமான நிலையம் மற்றும் பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ சேவை இயங்கி வருகிறது. இதற்கிடையே இப்போது இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. மாதவரம் - சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் - சோழிங்கநல்லூர் என்று 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்கும் சூழலில், சென்னையைப் போலவே மற்ற நகரங்களில் மெட்ரோ சேவையைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ குறித்த அறிவிப்பு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் வெளியிடப்பட்டது. குறிப்பாக மதுரை மெட்ரோ மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அறிவிப்பு வெளியான உடனேயே இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டது. மதுரை மெட்ரோவுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
எப்போது தொடங்கப்படும்: மதுரை மெட்ரோவுக்கு அரசு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இதனிடையே மதுரை மெட்ரோவின் கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டு தொடங்கி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் எனச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.

2,500 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகர் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய நகரமாகவும், பரப்பளவு அடிப்படையில் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்த பழமையான நகருக்குத் தான் இப்போது அதிநவீன மெட்ரோ சேவை வரவுள்ளது. திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ அமைக்க முடிவு செய்துள்ளனர்.
என்ன பிளான்: மெட்ரோவின் முதல் 26 கிலோமீட்டர் மேம்பாலத்தில் இருக்கும், கடைசி 5 கிலோமீட்டர் சுரங்கமாக இருக்கும். மதுரை நகரின் பழமையைப் பாதுகாக்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரே குறிப்பிட்ட பகுதி வைகை ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைத்து மெட்ரோ இயக்கப்படும். மதுரை மெட்ரோவுக்கு 8500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பாக 20% நிதி ஒதுக்கப்படும்.
அதேபோல முதலீட்டாளர்கள் மூலம் 60% பங்களிப்பு உடன் மதுரை மெட்ரோ கட்டப்பட உள்ளது. இப்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் செயலாக்க பிளான், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள், செலவு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆய்வு உள்ளிட்டவை குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த விரிவான திட்டப் பணிகள் தயாரிக்கத் தனியாக டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை நகருக்கு வழக்கமான மெட்ரோவிற்கு பதிலாக மெட்ரோ லைட் திட்டமே அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. மெட்ரோ லைட் என்பது மேம்படுத்தப்பட்ட டிராம் போல இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மதுரை மெட்ரோ ரயில்களில் தலா மூன்று பெட்டிகள் இருக்கும் என்றும் இதில் இரண்டாம் கட்டத்தில் மதுரை ஏர்போர்ட்டில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிகிறது. இதேபோல விரைவில் கோவை மெட்ரோவுக்கான பணிகளும் தொடங்கப்படும் என்றே தெரிகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications