ஆன்மிகம் -கல்வி -தொழில்! யார் இந்த கருமுத்து கண்ணன்! மதுரை மக்களின் மனங்களில் இடம்பிடித்தது எப்படி?
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார், தொழிலதிபர், கல்வித்தந்தை என பன்முகங்களை கொண்ட கருமுத்து கண்ணன் மறைவு மதுரை மாநகர மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ஸ்டாலின், ப.சிதம்பரம் என அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களின் அபிமானத்தை பெற்றவர் கருமுத்து கண்ணன்.

ஒரு தொழிலதிபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக நடந்துகொண்டவர் கருமுத்து கண்ணன். தியாகராசர் மில்ஸ் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து வரும் இவர், தொழிலாளர்களுடன் சீராக நல்லுறவை பேணக்கூடியவர்.
அதேபோல் தியாகராசர் கலை அறிவியல் கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி என கல்லூரிகளையும் நிர்வகித்து வந்த கருமுத்து கண்ணன், இதுவரை ஒரு மாணவரிடம் கூட ஒரு ரூபாய் டொனேஷன் வாங்கிய வரலாறு இல்லை.
டொனேஷன், கேபிடேஷன் ஃபீஸ் என பெற்றோரை அலைக்கழிக்கும் போலி கல்வித் தந்தைகளுக்கு மத்தியில் கல்வியை அறத்துடன் வழங்கிய பெருமைக்கு சொந்தக்காரர் கருமுத்து கண்ணன்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்காராக இன்று நேற்றல்ல 18 ஆண்டுகளாக இருந்து வரும் கருமுத்து கண்ணன், பக்தர்கள் போற்றத்தக்க தனது கோவில் நிர்வாக அறப்பணிகளை தொடர்ந்தார்.
அதிமுக, திமுக என தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மீனாட்சியம்மன் கோவில் தக்காராக கருமுத்து கண்ணனே தொடர்ந்தார். காரணம் அரசியல் பார்க்காமல் எல்லோரிடத்திலும் யதார்த்தமாக நடந்தக் கொள்ளக்கூடியவர்.
இவரது தந்தை தியாராசர் செட்டியார் நிறுவிய தியாகராசர் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்த பலர் இன்று உலகம் முழுவதும் கொடிக்கட்டிப் பறக்கின்றனர். சிலர் அரசியல் பிரமுகர்களாகவும் இருக்கின்றனர். மொழிப்போரின் போது கருமுத்து கண்ணனின் தந்தை தியாகராசர் செட்டியார் மாணவர்களுக்கு ஆதரவாக நின்றவர்.

முதலமைச்சரிடத்தில் தொலைபேசியில் பேசும் அளவுக்கு செல்வாக்கு இருப்பினும், அடக்கத்துடன் ஆரவாரமின்றி செயல்பட்டவர் கருமுத்து கண்ணன். ஆன்மிகம், கல்வி, தொழில், ஆகியவற்றை கடந்து சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் கருமுத்து கண்ணன்.
மதுரை மாநகர வளர்ச்சிக்கு எண்ணற்ற பங்களிப்பை செலுத்தியவர். தனது தந்தையை போல் தமிழ் பற்றாளராக திகழ்ந்தவர். முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதியால் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு - மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்குவதில் துணை நின்றவர்.
அதேபோல் இப்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் உருக்கமுடன் இரங்கல் விடுத்துள்ள நிலையில், அமைச்சர் பிடிஆரும், வைகோவும் கண்ணீர் விட்டு அழுதவாறு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அரசியல் தட்பவெப்ப நிலைகளை பற்றி கவலைக்கொள்ளாமல் வைகோவுடன் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புடன் பழகி வந்தவர் கருமுத்து கண்ணன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications