மோடிகிட்டயே.. "அவங்களை" பற்றி சொல்லிட்டேன்.. ஏன் தெரியுமா.. மதுரையில் குண்டை தூக்கி போட்ட ஆதீனம்
பிரதமரை ஏன் சந்தித்து பேசினேன் என்பது குறித்து ஆதீனம் விளக்கம் தந்துள்ளார்
மதுரை: பிரதமர் மோடியை தான் ஏன் சந்தித்து பேசினேன், எதற்காக புகார் சொன்னேன் என்பது குறித்து மதுரை ஆதீனம் விளக்கம் தந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டினப்பிரவேச விவகாரம் தலைதூக்கியது.. இதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசுக்கு எதிராக கடுமையான விமர்சித்து மதுரை ஆதீனம் அப்போது பேசியிருந்தார்..
இதற்கு திராவிடர் கழகம் தன்னுடைய எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தது.. பட்டினப்பிரவேசத்தை கண்டித்தது.. இதையடுத்து, திருமாவளவன் உட்பட பல கட்சிகளும் ஆதீனம் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக ஆதரவு
இதனால், ஆளுங்கட்சியினரால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்தது பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தார் ஆதீனம்.. உண்மையை சொல்லப்போனால், ஆதீனம் இந்த விஷயத்தை பற்றி பேச பேசதான், பட்டினப்பிரவேசம் என்ற விவகாரமே பெரிதானது.. சர்ச்சையை கிளப்பியது.. ஒருவழியாக திமுக அரசு இந்த விஷயத்தில் "நடுநிலைமை"யுடன், ஆதரவு தரவும், விவகாரம் முடிவுக்கு வந்தது.

வீரமணி
அப்போதும், வீரமணியை சீண்டி, நன்றி சொல்லி பேட்டி தந்திருந்தார் ஆதீனம்... எனினும் மோடியை சந்தித்து புகார் சொல்ல போகிறேன் என்பவர், நிஜமாகவே, சொன்னபடியே பிரதமரையும் சந்தித்து, புகாரும் சொல்லிவிட்டார்.. பிரதமர் மோடி டெல்லி புறப்பட சென்னை ஏர்போர்ட் வந்தபோது, அங்கு ஸ்ட்ரைட்டாகவே சென்று சந்தித்து பேசினார். பட்டிணப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதித்த கண்டனம் தன் உயிருக்கு ஆபத்து இருப்பது வரை ஒன்றுவிடாமல் புட்டு புட்டு வைத்துவிட்டார். இந்த சந்திப்பும், புகாரும் குறித்துதான், இன்றைய தினம் ஆதீனம் சொல்லி உள்ளார்.

துறவியர் மாநாடு
இப்போது மீண்டும் ஒருவிஷயத்தை கிளப்பி விட்டுள்ளார்.. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஒரு அங்கமான, அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில், மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில், 2 நாள் துறவியர் மாநாடு இன்று துவங்கியது.. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் துவக்க உரையாற்றினார்... விஎச்பி அகில உலக இணை பொதுச்செயலர் தாணுமலையான் தலைமை உரையாற்றினார்.

கோயில் சொத்து
இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசியதாவது: "கோயிலை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் போராட்டம் நடத்தினோம்... கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி பூச மறுக்கின்றனர்... கோயில் சொத்துகளுக்கு குத்தகை, வாடகை பணம் முறையாக வருவதில்லை... இதைபற்றி கேட்டால், பேசினால் இடையூறு செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்கிறார்கள்.. ஆதீனம் என்றால், அதற்காக பதுங்கி கிடக்க முடியாது... ஜால்ரா அடிக்க முடியாது. ஒரே குறிக்கோள், இந்துக்களுக்கு ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும்... இதையெல்லாம் பேசியதனால்தான், பிரதமரிடம் நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது" என்றார்.

மதமாற்றம்
தொடர்ந்து, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேசும்போது, மதமாற்றத்தை தடுக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தனித்து இயங்கும் வாரியத்தின் கீழ் கோயிலை கொண்டு வர வேண்டும் என்றார்... மாநாட்டில் விஎச்பி. அகில உலக பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. அதாவது, மதமாற்றத்தை தடுப்பது, தாய் மதத்திற்கு திரும்புவோரை ஊக்குவிப்பது, கிராமங்களில் துறவியர் தங்கி தொண்டாற்றி ஏற்றத்தாழ்வுகளை போக்குவது இதெல்லாம் குறித்து பேசத்தான் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications