தாலி கட்ட நெருங்கும்போது.. டக்குனு வந்த கர்ப்பிணி.. வெலவெலத்து போன மாப்பிள்ளை.. "100க்கு" பறந்த போன்

நிறைமாத கர்ப்பிணி பெண், காதலனின் திருமணத்தை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்திவிட்டார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தாலி கட்ட ரெடியாக நின்று கொண்டிருந்த மாப்பிள்ளைக்கு, கர்ப்பிணியை பார்த்ததுமே தூக்கி வாரிப்போட்டது.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்... இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவர்களது மூத்த மகள் பெயர் நாகபிரியா.. 30 வயதாகிறது.. பிசிஏ படித்துவிட்டு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார்... இவர்களது உறவினர் சின்னசாமி..

 கர்ப்பம் - கர்ப்பிணி

கர்ப்பம் - கர்ப்பிணி

மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்தவர்தான் சின்னச்சாமி.. 32 வயதாகிறது.. இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்... சொந்தக்காரர்கள் என்பதால், சின்னசாமிக்கும், நாகபிரியாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. கடந்த 2 வருடங்களாக காதலித்தும் வந்துள்ளனர்... நெருங்கி பழகியதால் நாகபிரியா கர்ப்பமாகிவிட்டார். இப்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில், சின்னச்சாமிக்கு அவரது வீட்டில் வேறு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தார்கள்.. அந்த பெண் விருதுநகரை சேர்ந்தவராம்.. திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடந்தன.. நேற்றுதான் கல்யாணம்.

தாலி

தாலி

திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஒரு மண்டபத்தில், உறவினர்களும், நண்பர்களும் சூழ்ந்து திரண்டு வந்தனர்.. ஆனால் இந்த கல்யாண விஷயம் நேற்று முன்தினம் இரவுதான், நாகபிரியாவுக்கு தெரியவந்துள்ளது. நேற்று காலை தன்னுடைய பெற்றோர், சொந்தக்காரர்களுடன் மண்டபத்தில் புயலென நுழைந்தார்.. அந்த நேரம் பார்த்துதான், சின்னசாமி, மணப்பெண்ணுக்கு தாலி கட்ட தயாராக நின்றிருந்தார்.. மண்டபத்தில் தன் கண்முன்னே, நாகப்பிரியா வந்து நின்றதை பார்த்ததுமே, மாப்பிள்ளைக்கு குப்பென வியர்த்துவிட்டது.. என்னை கர்ப்பமாக்கிவிட்டு இங்கு தாலி கட்ட வந்துட்டியா என்று நாகப்பிரியா ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார்..

 கரெக்ட்டா தாலி எடுத்தபோது

கரெக்ட்டா தாலி எடுத்தபோது

இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, 100-க்கு போனை போட்ட நாகப்பிரியா, போலீஸையும் மண்டபத்துக்கு வரவழைத்தார். இதையடுத்து, திருமங்கலம் டவுன் போலீசார் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.. அவர்கள் உள்ளே நுழைந்த நேரம் நாகபிரியா, அதே மண்டபத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.. அப்போது, மணமகன் வீட்டாருக்கும் நாகபிரியா குடும்பத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, நாகப்பிரியா சின்னசாமி, அவரது பெற்றோரை, திருமங்கலம் மகளிர் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

அங்கு இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்... தகவல் அறிந்த ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டாரிடம், மாப்பிள்ளை குடும்பத்தார் பேச்சுவார்த்தை நடத்தி, திருமணத்தை நிறுத்துவது என முடிவு செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இதனிடையே, சின்னசாமி, நாகபிரியாவை ஏற்றுக் கொள்வதாக உறுதிதந்தார்.. இருந்தாலும், இது தொடர்பாக திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளும்படி, மகளிர் போலீசார், நாகபிரியா, சின்னசாமி குடும்பத்தாரை அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+