மதுரை ஹைகோர்ட்டுக்கு ஓடிவந்த பெண்.. ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் பரபரபபு..நீதிபதி சொன்னதை பாருங்க
மதுரை: சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியினர், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மதுரை ஹைகோர்ட்டை நாடியிருக்கிறார்கள்.. இதையடுத்து, தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் மதுரை கிளையும் அதிரடியாக ஆணை பிறப்பித்துள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்டம் வாரியாக குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் முறையிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 வருடங்களுக்கு முன்பு, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த கிருபாராணி, மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில், "என்னுடைய குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டேன். எங்களை என் குடும்பத்தினர் மிரட்டி வருவதால், எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
தமிழக அரசு: அதனால், சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்டம் வாரியாக சிறப்புக்குழு அமைக்க 2016-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை.
என்னுடைய குடும்பத்தினர் மிரட்டல் குறித்து போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.. அதனால், எனவே காவல் கண்காணிப்பாளர், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் தலைமையில் குழு அமைத்து சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை மிரட்டுவோர் மீது உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
மதுரை ஹைகோர்ட்: இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்டம் வாரியாக சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று கடந்த 2016-ல் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலுடன், மனுதாரர் அரசிடம் முறையிட்டு தீர்வு காணலாம் என்று உத்தரவிட்டு, அந்த வழக்கையும் முடித்து வைத்திருந்தது.
இதையடுத்து, சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படியே பாதுகாப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலியில் கடந்த மாதம்கூட, சாதி மறுப்பு திருமணம் செய்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
சாதி மறுப்பு திருமணம்: பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது..
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடிவிட்டனர்.. இதனால், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண், தங்களுக்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். அப்போது தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
பாதுகாப்பு வேண்டும்: இந்நிலையில், இளம்தம்பதியினர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மீண்டும், மதுரை ஐகோர்ட்டை இன்று நாடியிருக்கிறார்கள்.. ஜாதி மறுப்பு திருமணம் செய்த மதுரையை சேர்ந்த தீபன் - கவுசல்யா தம்பதியினர் தாக்கல் செய்த மனுவில், "ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தங்களை பெற்றோர் கொல்ல முயற்சிப்பதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கவுசல்யா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க ஆணையிட்டுள்ளது. பாதுகாப்பு கோரி சம்பந்தப்பட்ட போலீசாரை அணுகி தம்பதியினர் மனு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications