உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு! 20 காளைகளை அடக்கிய அபி சித்தர் முதலிடம்
மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் காளைகள் பங்கேற்றது. சுமார் 1000 காளைகள் இதில் பங்கேற்க உள்ள நிலையில், 1698 மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொள்ளப் பதிவு செய்திருந்தனர்.
பொங்கல் சமயத்தில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மாநிலம் முழுக்க நடத்தப்படும். பொங்கலன்று அவனியாபுரத்திலும் மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:
அடுத்த கட்டமாக உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் காணும் பொங்கல் நாளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண அதிகாலை முதலே முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஆன்லைன் பதிவு கடந்த 7, 8ம் தேதிகளில் நடைபெற்றன. இதில் மொத்தம் 5786 ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 1000 காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் என கூறப்படுகிறது.
மாடுபிடி வீரர்கள்
மேலும், இதில் 1698 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள். டோக்கன் வழங்கப்பட்டுள்ள சூழலில், மருத்துவ பரிசோதனை, எடை சரிபார்ப்பு ஆகியவையும் அதிகாலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. பல்வேறு சுற்றுகளாக ஜல்லிக்கட்டு பிரித்து நடைபெறும் நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 100 காளைகள் அவிழ்த்துவிடப்படுகிறது.
இதில் அதிக காளையை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் நன்கு விளையாடிய காளைகளுக்கும் மாலை கார் உள்ளிட்ட சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. எப்போதும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோரின் காளைகள் பங்கேற்கும். அதன்படி இந்த முறையும் நடிகர் சூரியின் காளை உள்ளிட்டவை இதில் பங்கேற்க உள்ளது.
காளைகள் மீது பவுடர் வீசக்கூடாது, வாடிவாசலுக்கு வரும் போது இரண்டு பேர் மட்டுமே இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல மாடுபிடி வீரர்களுக்கும் மது குடித்திருக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தாமதம்
முதலில் ஐந்து கோயில் காளைகள் இறங்கிவிடப்படும் சூழலில், தொடர்ச்சியாக மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்படும். காலை 7.30 மணியளவில் போட்டிகள் தொடங்கும் என முதலில் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், துணை முதல்வர் உதயநிதியின் வருகை உள்ளிட்ட சில காரணங்களால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குவாதமும் ஏற்பட்ட நிலையில், ஒரு வழியாக இப்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தமாக 9 சுற்றுப் போட்டிகள் நடந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இதில் 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அபி சித்தருக்கு கார் பரிசு அளிக்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய பொதும்பு ஸ்ரீதர் 2வது இடத்தை பிடித்த சூழலில் மடப்புரம் விக்னேஷ் 10 காளைகளை அடக்கி 3வது இடத்தை பிடித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications