சட்டென பொய்த்த மழை.. கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி அணைகளுக்கான நீர்வரத்து குறைந்தது- தமிழ்நாட்டுக்கு?
மண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்படும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளுக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிடுகிற சொற்ப நீர் எவ்வளவு நாளுக்கு தொடரும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு வரும் காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டியதுதான் மண்டியா மாவட்டத்தின் கண்ணம்பாடி அணை எனப்படுகிற கிருஷ்ணராஜ சாகர் அணை. 100 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா கட்டிய அணையால்தான் காவிரி பிரச்சனை உருவானது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா கபளீகரம் செய்வது இந்த அணையால்தான்.

குடகு மாவட்டம்: கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதி குடகு மாவட்டம். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது குடகு மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. ஆனால் அந்த கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை. குடகு மாவட்டத்தில் பெய்யும் மழையால்தான் கேஆர்எஸ் அணை நிரம்பும். அப்படி கேஆர்எஸ் அணை நிரம்பினால் உபரி நீரைத்தான் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறப்பதும் வழக்கம். கடந்த காலங்களில் அப்படித்தான் நடந்தது. இந்த ஆண்டு குடகு மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டது என்கிறது கர்நாடகா.
கேஆர்எஸ் அணை: கேஆர்எஸ் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. ஆகஸ்ட் மாதத்தில் கேஆர்எஸ் அணையில் இருந்த நீர் அளவு 117 அடி. சில நாட்களுக்கு முன்னர் கேஆர்எஸ் அணையில் 97 அடி நீர் இருந்தது. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு சொற்பமான நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டது. இந்நிலையில் திடீரென குடகு மாவட்டத்தில் மழை பெய்தது. இதனால் கேஆர்எஸ் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 100 அடியை எட்டியது. இதன்பின்னராவது காவியில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை திறக்காமல் குறைவான நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டது. இந்நிலையில் குடகு மாவட்டத்தில் மழை குறைந்துவிட்டது. இதனால் கேஆர்எஸ் அணைக்கான நீர் வரத்து பெருமளவு குறைந்தது. அக்டோபர் 3-ந் தேதி கேஆர்எஸ் அணைக்கு 11,800 கன அடி நீர் வந்தது. இது 9,052 ஆக குறைந்து தற்போது வினாடிக்கு 5,861 கன அடி நீர்தான் வருகிறது. தற்போது கேஆர்எஸ் அணையில் 100.82 அடி நீர் இருக்கிறது.
கபினி அணை: இதேபோல தமிழ்நாட்டுக்கு வரக் கூடிய காவிரி நீர் கபினி அணையில் இருந்தும் திறக்கப்படுகிறது. இந்த அணைக்கான மழை பிடிப்பு பகுதி கேரளாவின் வயநாடு. மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு கடந்த 3-ந் தேதி வினாடிக்கு 3,349 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. தற்போது இது 2,800 அடியாக குறைந்துவிட்டது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சி. தற்போது நீர் இருப்பு 14.85 டிஎம்சி.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்?: கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2,489 கன அடிநீர் திறக்கப்பட்டது சற்று குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் இதே நிலைமை தொடர்ந்தால் தமிழ்நாட்டுக்கான சொற்ப நீரையும் கர்நாடகா திறக்காமல் போகும் அபாயம் உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications