காவிரி: 87-வது நாளாக தமிழ்நாட்டுக்கு எதிராக கன்னட விவசாயிகள் போராட்டம்.. மோடி மீது கடும் அதிருப்தி!
மண்டியா: காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில விவசாயிகள் நேற்று 87-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி கனத்த மவுனம் காக்கிறார் என்பது கர்நாடகா விவசாயிகளின் குற்றச்சாட்டு.
காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்ற இறுதி உத்தரவும் வந்தது. இந்த இறுதி உத்தரவு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பும் வந்தது. இதனடிப்படையில்தான் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டன.

கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீர் திறக்கலாம் என பரிந்துரைப்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் பணி. இதனை ஆராய்ந்து உத்தரவு பிறப்பிப்பது காவிரி மேலாண்மை ஆணையம். தமிழ்நாட்டுக்கு போதுமான நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்துகிற போதும் சொற்பமான நீரை திறந்துவிடவே ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கும்; மேலாண்மை ஆணையம் உத்தரவிடும். ஆனால் கர்நாடகாவோ, தமிழ்நாட்டுக்கு இந்த சொற்ப நீரைக் கூட திறந்துவிட மறுக்கும்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு காவிரி நீரைக் கூட திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி 3 மாதங்களுக்கு மண்டியாவில் பாஜகவினர் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தை கர்நாடகா விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். மண்டியா நகரில் உள்ள விஸ்வேஸ்ரய்யா பூங்காவில் 87-வது நாளாக நேற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தை கர்நாடகா விவசாயிகள் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு கர்நாடகா ஒக்கலிகா கவுடா ஜாதி சங்கத்தினர் மற்றும் சில அமைப்புகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தன.
கர்நாடகா விவசாயிகளைப் பொறுத்தவரை காவிரி ஒழுங்காற்று குழு - மேலாண்மை ஆணையம் ஆகியவற்றைக் கலைக்க வேண்டும்; காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி மவுனமாக இருக்கக் கூடாது; பிரதமர் மோடியின் கனத்த மவுனம் கண்டனத்துக்குரியது என்கின்றனர். மேலும் தமிழ்நாட்டுக்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து நீரை திறக்கவே கூடாது என்பதும் இந்த விவசாயிகளின் போராட்டம். அண்மையில் இந்தப் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications