கொலை செய்துவிட்டு பாகிஸ்தான் மீது பழிபோடப்பட்டதா.. மங்களூர் வழக்கில் பகீர் திருப்பம்
மங்களூர்: கர்நாடகாவின் மங்களூரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகச் சொல்லி இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இருப்பினும், இந்த விவகாரத்தை விசாரித்து வரும் போலீசார், அந்த நபர் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியதற்கும் அதற்காகவே அடித்துக் கொல்லப்பட்டார் என்பதையும் நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மங்களூரில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. அப்போது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அப்போது இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கோஷமிட்ட நிலையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது.

பாகிஸ்தான் கோஷம் இல்லை
அதாவது அந்த இளைஞர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட்டதால் 25 பேர் சேர்ந்து அந்த நபரைக் கட்டைகள், கற்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அந்த நபர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 15 பேரைக் கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து பெங்களூர் நகரக் காவல் ஆணையர் அனுபம் அகர்வால் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
ஆதாரம் இல்லை
அதாவது மங்களூர் புறநகரில் நடந்த இந்தப் படுகொலை சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் தொடர்பாக எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் இதனால் அது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட நபர் கேரளாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது. போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய் தகராறில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
சஸ்பெண்ட்
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சரியான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் கூறி மங்களூர் ரூரல் போலீஸ் நிலையத்தைதே சேர்ந்த இன்ஸ்பெக்டர் சிவகுமார் கே.ஆர், தலைமைக் காவலர் சந்திரா பி மற்றும் காவலர் யல்லலிங்கா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் போலீசார் மீது தவறு இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கடிதம் எழுதிய நிலையில், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் மோதல் வெடித்ததில் அந்த நபர் தாக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் கழித்து அவர் உயிரிழந்துள்ளார். அவரின் உடலில் பல காயங்கள் இருந்தபோதிலும், இயற்கைக்கு மாறான மரணம் என்று மட்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீவிரத்தை உணரவில்லை
இது குறித்து அகர்வால் மேலும் கூறுகையில், "இந்த வழக்கின் தீவிரத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.. உடலில் கடுமையான காயங்கள் இருந்தபோதிலும், இயற்கைக்கு மாறான மரணம் என்று மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
கிரிக்கெட் மைதானத்தில் ஒரு கும்பல் சேர்ந்து கொண்டு ஒருவரைத் தாக்குவதாக அப்பகுதியைச் சேர்ந்த தீபக் என்பல் புகார் அளித்துள்ளார். இருப்பினும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையில் கொலை என்று தெரிய வரும் வரை அவர் யார் என்பது கூட அடையாளம் காணப்படவில்லை.
வழக்குப்பதிவு
அதன் பிறகே கும்பல் வன்முறை மற்றும் கொலை தொடர்பான பாரதீய நியாய சன்ஹிதா, 2023இன் பிரிவு 103(2) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான குடுப்புவை சேர்ந்த சச்சின் என்வரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அங்குள்ள வீடியோ ஆதாரத்தை வைத்து இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதையும் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
-
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications