அமைச்சர் பதவி இன்னைக்கு வரும்.. நாளைக்கு போகும்.. மொதல்ல மனுஷனா இருக்கணும்.. பட்டென சொன்ன உதயநிதி!
சென்னை: சனாதன தர்மம் பற்றிய பேச்சு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோரின் அமைச்சர் பதவிகளை பறிக்க வேண்டும் என பாஜக கோரி வருகிறது.
இந்நிலையில், “அமைச்சர் பதவி இன்று வரும், நாளைக்குப் போகும். எம்எல்ஏ பதவி இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும். இவை எல்லாவற்றையும் விட முதலில் மனிதனாக இருக்க வேண்டும்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நவம்பர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அமைச்சர்களான உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் கலந்துக்கொண்டு கருத்துக்களை கூறியுள்ளனர். அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடமையில் இருந்து தவறியுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனத்தை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆளும் கட்சியை சார்ந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது உயர்நீதிமன்றம்.
இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை அழிக்க வேண்டும் என யாரும் எந்த கூட்டத்தையும் கூட்டுவதற்கு உரிமையில்லை என்றும் இத்தகைய பேச்சுகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை ஆட்சியாளர்கள் உணர்வதோடு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இது போன்று மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் போக்கினை ஏற்படுத்துவதை விடுத்து, உடல் நலத்திற்கு தீங்கினை ஏற்படுத்தும் மது மற்றும் போதை பொருட்களை அழிப்பது, ஊழலை ஒழிப்பது, தீண்டாமை ஒழிப்பு போன்ற சமூக சீர்கேடுகளை ஒழிப்பது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துவது சிறந்தது என்று அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதித்து நடந்து கொள்வாரா? திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? அமைச்சர் பதவி போனாலும் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உயர்நீதிமன்றத்தின் கருத்துகளை மதித்து மன்னிப்பு கேட்பாரா? அல்லது ராஜினாமா செய்வாரா?
இனி சனாதன தர்மம் அதாவது இந்து மதம் குறித்து யாரும் விமர்சிக்கக் கூடாது என்று முதல்வர் உத்தரவிடுவாரா? இப்போதாவது நீதிமன்றத்தின் கருத்துப்படி அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?” என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பினார். பாஜகவினர், அமைச்சர் உதயநிதி பதவியை பறிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தவறு என்றும், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நான் பேசியது எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். நான் பேசிய வார்த்தைகளை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனது கொள்கையைத்தான் நான் பேசியிருக்கிறேன். எதுவாக இருந்தாலும், சட்டப்படி சந்திப்போம்” எனக் கூறியுள்ளார்.
அமைச்சராக இருந்துகொண்டு ஒரு மதத்துக்கு எதிராக தவறாக பேசியதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் பதவி இன்று வரும், நாளைக்குப் போய்விடும். எம்எல்ஏ பதவி இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும். இளைஞரணி செயலாளர் பதவியும் அப்படித்தான். இவை எல்லாவற்றையும் விட முதலில் மனிதனாக இருக்க வேண்டும். எனவே, இதனை சட்டப்படி சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications