மிசோரமில் கல்குவாரி மலை மொத்தமாக இடிந்து விழுந்தது!15 பீகார் தொழிலாளர்கள் கதி என்ன? அதிர்ச்சி வீடியோ
ஐய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி மலை ஒன்று அப்படியே மொத்தமாக இடிந்து விழுந்ததில் 15 பீகார் தொழிலாளர்கள் சிக்கினர். மலை சரிந்து விழுந்ததில் சிக்கிய 15 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் குன்றுகள், கல் குவாரிகளாக்கப்பட்டு உடைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கல்குவாரிகள் உள்ளிட்டவைகளுக்கு உள்ளூர் பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம்.
வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்படுகின்றன. இத்தகைய ஆயுத குழுக்கள், கல்குவாரிகளிடம் தனியாக வரி வசூலித்து அனுமதிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மிசோரம் மாநிலத்திலும் இத்தகைய கல்குவாரிகள் அதிகம் உள்ளன. மிசோரம் மாநிலத்தின் ஹனாதியால் மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பீகார் மாநிலத்தவர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் தொழிலாளர்கள் உணவுக்காக சென்றிருந்தனர்.
#DramaticVisuals- moments when a dozen labourers from Bihar got trapped after a stone quarry collapsed in Mizoram today at Maudarh, Hnahthial district,a massive multi-agency rescue operation is on @ndtv Reports. pic.twitter.com/CwDR1VwBzk
— Ratnadip Choudhury (@RatnadipC) November 14, 2022
அதேநேரத்தில் பல தொழிலாளர்கள் கல்குவாரியின் கீழே வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கல்குவாரி மலை அப்படியே மொத்தமாக இடிந்து கீழே வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இந்த 15 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் கல்குவாரி மலை அப்படியே சரிந்து மொத்தமாக கீழே விழும் வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வீடியோ காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications