மோடியின் 100 தவறுகள்.. மார்டன் காலத்து சிசுபாலன் இவர்தான்.. புத்தகமே போட்ட காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி குறித்து, காங்கிரஸ் கட்சி இன்று புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பெயர 'மோடியின் 100 தவறுகள்' ( 100 Mistakes of Modi).இந்த புத்தகத்தில், மோடியை இக்காலத்து சிசுபாலன் என குறிப்பிடப்படடுள்ளது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள இந்த புத்தகம், அம்மாநிலத்தின் தாதர் நகரில் இன்று வெளியிடப்பட்டது.

முன்னதாக, கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால் மற்றும் அசோக் சவான் ஆகியோரிடம் புத்தக வெளியீடு தொடர்பாக ஆலோசித்து அனுமதி பெறப்பட்டது.

முதல் தப்பு

முதல் தப்பு

இப்புத்தகத்தில் ரபேல் கொள்முதல் விவகாரம் மோடியின் முதல் தவறு என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு கையெழுத்திட்டதை விட, மும்மடங்கு விலையை உயர்த்தியுள்ளது மோடி அரசு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. டஸ்ஸால்ட் நிறுவனத்தின் பங்காளியாக அனில் அம்பானி நிறுவனத்தை தேர்ந்தெடுக்க மோடியை தூண்டியது எது என்று, அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

போலி வாக்குறுதி

போலி வாக்குறுதி

'பொய் வாக்குறுதிகள்; குறைவான பணிகள்' என்ற தலைப்பில் அடுத்த தவறு என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்கு அதிகம் செலவிட்டால் போதும், பணிகள் செய்ய வேண்டாம் என்பதுதான் மோடி அரசின் குறிக்கோள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதேபோல பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற விவகாரங்களும் இப்புத்தகத்தில் மோடியின் தவறுகளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மார்டன் டே சிசுபாலன் மோடிதான் என அந்த புத்தகத்தின் துணை தலைப்பு வர்ணிக்கிறது.

சிசுபாலன்

மகாபாரதத்தில், வரும் பாத்திரத்தின் பெயர்தான் சிசுபாலன். ஸ்ரீ கிருஷ்ணரின் மைத்துனரான சிசுபாலன் 100 தவறுகள் செய்யும்வரை பொறுத்துக்கொள்ளுமாறு, கிருஷ்ணரிடம் சிசுபாலன் தாயார் வரம் கேட்டு பெற்றிருப்பார். எனவே, கிருஷ்ணரும் சிசுபாலன் செய்யும் அவமரியாதைகளையும், தவறுகளையும் பொறுத்துக்கொண்டே இருப்பார்.

101வது தவறு

101வது தவறு

101வது முறையாக சிசுபாலன் தவறிழைக்கும்போது, வெகுண்டெழுந்து, தனது சுதர்சன சக்கரத்தால் சிசுபாலன் தலையை துண்டிப்பார் ஸ்ரீகிருஷ்ணர். இந்த புராணத்தை நினைவுபடுத்தவே இப்படியாக மோடிக்கு சிசுபாலன் பெயரை சூட்டியுள்ளது காங்கிரஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+