என்னோட "ரோமியோ"! ஒரே காதலனுக்காக அடித்துக்கொண்ட இரு மாணவிகள்! அப்போ அந்த பையன் செஞ்ச காரியம் இருக்கே
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பஸ் நிலையம் ஒன்றில் அரங்கேறிய சம்பவம் அங்கிருந்தவர்களையே ஒரு நிமிடம் குழப்பிவிட்டது.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆண்கள் இளம் பெண்களைக் காதலில் விழ வைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். எப்படியோ கஷ்டப்பட்டுக் காதலிக்க வைத்து விட்டாலும் அதன் பின்னர் திண்டாட்டம் தான்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்தில் அரங்கேறிய சம்பவம் அங்கிருந்தவர்களையே ஒரு நிமிடம் குழப்பிவிட்டது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலம் பைதான் மாவட்டத்தில் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் பேருந்து நிறுத்ததில் வைத்தே திடீரென சண்டையிடத் தொடங்கி உள்ளனர். காலை நேரத்தில் பைத்தானில் உள்ள நெரிசலான பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பொது இடத்தில் இரு மாணவிகள் சண்டையிடுவதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சற்று பதறிவிட்டனர்.

சண்டை
அதன் பின்னர் இது தொடர்பாக அவர்கள் விசாரித்துப் பார்த்துள்ளனர். இருவரும் சண்டையிடுவதற்கான காரணத்தைக் கேட்டு அவர்கள் வெறுத்தே போய்விட்டனர். அன்றைய தினம் சண்டையிட்ட மாணவிகளில் ஒருவர், தனது ஆண் நண்பர் உடன் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார் இருவரும் அங்குப் பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடுப்பான காதலிகள்
அந்தச் சமயம் அங்கு வந்த மற்றொரு பெண், இதைப் பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டாராம். ஏனென்றால் அந்த பையன் இவரையும் காதலிப்பதாகக் கூறி உள்ளார். இருவரும் சில காலமாகவே காதலித்து வந்துள்ளனர். தனது பாய் பிரண்ட் மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து அந்த பெண் கடுப்பாகி விட்டார். ஆனால், தன்னை ஏமாற்றிய காதலன் மீது இல்லை. தன்னை போலவே ஏமாந்து போன அந்த பெண்ணிடம்!

ரோமியோ செய்த காரியம்
இது தொடர்பாக அந்த இரு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது அப்படியைச் சண்டையாகவும் மாறியுள்ளது. இருவரும் பொது இடம் என்று கூட பார்க்காமல் அடித்துக் கொண்டு இருந்துள்ளனர். காலை அனைவரும் வேலைக்குச் செல்லும் நேரம் என்பதால் இதைச் சிலர் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். ஆனால், இதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல் அடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அட்வைஸ்
இத்தனை சம்பவங்கள் இங்கு நடந்து கொண்டிருக்க அந்த சிறுவனோ சத்தமில்லாமல் அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இரு மாணவிகள் பொது இடத்தில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். மாணவிகள் என்பதால், வழக்கு எதுவும் பதியாமல் அட்வைஸ் செய்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications