Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிம் மாஸ்டருக்கு 3 மனைவிகள்.. நாலாவதாக ஒரு கள்ளக்காதல்.. கடைசியில் நடந்த கொலை.. அலறும் மும்பை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் இளம் பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாமல் இருந்த நிலையில் தற்போது அந்த பெண் யார் என்றும் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற தகவலும் போலீஸார் விசாரணையில் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையை அடுத்த தாம்னி கிராமத்தில் கடந்த 17 ஆம் தேதி காதி ஆற்றில் 27 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் இருந்தது. அந்த உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

அந்த பெண் கழுத்தை அறுத்து கொன்று ஆற்றில் வீசியிருந்தது தெரியவந்தது. நவிமும்பை குற்றப்பிரிவு போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து போலீஸார் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இளம்பெண்

இளம்பெண்

இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் நவிமும்பையில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர். அதிலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

உதவி இன்ஸ்பெக்டர் தலைமைலியான குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. கொலை செய்யப்பட்ட பெண் காலில் செருப்பு அணிந்திருந்தார். அந்த செருப்பில் கடையின் பெயர் இருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட செருப்பு கடையின் அனைத்து கிளைகளுக்கும் சென்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை காட்டி போலீஸார் விசாரணை நடத்தினர்.

செருப்பு வாங்க வந்த பெண்

செருப்பு வாங்க வந்த பெண்

இந்த நிலையில் வாஷியில் ஒரு கடையில் அந்த பெண் செருப்பு வாங்க வந்ததாக கடை ஊழியர் தெரிவித்தார். இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அந்த பெண்ணுடன் நன்கு திடகாத்திரமாக இருந்த ஒருவரும் வந்திருந்தார். உடனே அந்த பெண்ணின் பெயர் ஊர்வி கடந்த 7 ஆண்டுகளாக மும்பையில் உள்ள ஒரு பாரில் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

பாரில் வேலை செய்த பெண்

பாரில் வேலை செய்த பெண்

அவர் வேலை செய்த இடத்திற்குச் சென்று அவர் குறித்து விசாரித்த போதுதான் ஊர்வி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என தெரியவந்தது. ஊர்வியுடன் வந்த இளைஞரின் பெயர் ரியாஸ் கான் என்றும் தெரியவந்தது. தேவ்னார் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ஜிம் பயிற்சியாளராக இருக்கிறார். அவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இதில் ஊர்வி பணியாற்றும் பாருக்கு பீர் அருந்த வந்த போது ஊர்வியுடன் அந்த இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். ஊர்வி தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ரியாஸை வற்புறுத்தியதாக தெரிகிறது.

3 மனைவிகள்

3 மனைவிகள்

ஆனால் ஏற்கெனவே 3 மனைவிகள் இருக்கும் நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியாது. உனக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகும் வரை நாம் இப்படியே தொடர்பில் இருக்கலாம் என ரியாஸ் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர்வி, என்னுடன் ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்ற பார்க்கிறாயா, இரு உன்னை உன் மனைவிகளிடம் சொல்லி பிரச்சினை செய்கிறேன்.

ஊர்வியை கொல்ல திட்டம்

ஊர்வியை கொல்ல திட்டம்

போலீஸிலும் புகார் கொடுக்கிறேன் என மிரட்டியிருக்கிறார். உடனே ஊர்வியை கொலை செய்ய ரியாஸ் கான் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர் இம்ரான் ஷேக்கிடம் உதவி கேட்டுள்ளார். கடந்த 13 ஆம் தேதி ஊர்வியை நைசாக பேசி தன் காரில் ஷில்பாடா நோக்கிச் சென்றார் ரியாஸ் கான். அங்கு பேசி வைத்த படி பாதியில் இம்ரான் ஷேக்கை காரில் ஏற்றிக் கொண்டு ரியாஸ் கான் சென்றார். அப்போது காரிலேயே ஊர்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் உடலை ஆற்றில் போட்டுவிட்டு சென்றனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+