மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஐயோ காப்பாத்துங்க, நெருப்பு".. 19வது மாடியில் இருந்து தொங்கிய நபர் கீழே குதித்து.. மும்பை கொடுமை

தீ விபத்து காரணமாக, 19வது மாடியில் இருந்து குதித்து விழுந்த நபர் உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் அபார்ட்மென்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், இளைஞர் ஒருவர் உயிருக்கு பயந்து மாடியில் இருந்து கீழே குதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.

மும்பையின் கியூரி சாலையில் "ஒன் அவிக்னா பார்க்" என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது... இந்த குடியிருப்பில் 19வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்..

அமரீந்தர்சிங்கின் பெண் நண்பர் அரூசா ஆலம்-ஐஎஸ்ஐ தொடர்பு குறித்து விசாரணை-பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர்அமரீந்தர்சிங்கின் பெண் நண்பர் அரூசா ஆலம்-ஐஎஸ்ஐ தொடர்பு குறித்து விசாரணை-பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர்

 கட்டிடங்கள்

கட்டிடங்கள்

ஆனால், அந்த கட்டிடத்தில் நிறைய பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... வீடுகள் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆபீஸ்கள் இந்த கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன.. மொத்தம் 60 மாடிகள் கொண்ட அப்பார்ட்மென்ட் இது.. இன்று காலை 11.50 மணிக்கு, இதன் 19 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

 அடுக்குமாடி குடியிருப்பு

அடுக்குமாடி குடியிருப்பு

அந்த தீயிலிருந்து தப்பித்து கொள்ள ஒருவர், 19வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து தன் உயிரை காப்பாற்றி கொள்ள முயன்றார்.. ஆனால், அங்கிருந்து கீழே குதிக்க அவரிடம் கயிறோ அல்லது வேறு பொருட்கள் எதுவும் இல்லாததால், 19 மாடியில் தொங்கியபடியே கதறினார்.. சிறிது நேரம் தொங்கிக் கொண்டு இருந்த அந்த நபர், தீ மளமளவென கொழுந்துவிட்டு எரியவும், வேறு வழியின்றி 19 வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார்..

 உயிரிழப்பு

உயிரிழப்பு

இதை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி கொண்டு ஓடினர்.. பலத்த காயமடைந்து அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 30 வயதுடைய அந்த இளைஞர் பெயர் அருண் திவாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.. இப்போது அந்த 60 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு சுமார் 24 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியும் நடந்து வருகிறது..

 மீட்பு பணிகள்

மீட்பு பணிகள்


கட்டிடத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்ற விவரமும் வெளியாகவில்லை... தீவிபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்றும் உடனடியாக தெரியவில்லை.. அதேபோல, தீவிபத்துக்கான காரணமும் இன்னும் கண்டறியப்படவில்ல.. தீயை அணைக்கும் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே சேதம் குறித்த முழுதகவல்கள் தெரியவரும் என்கிறார்கள். இதனிடையே, உயிர்பிழைத்து கொள்ள 19வது மாடி கட்டிடத்தில் இளைஞர் தொங்கியதும், அங்கிருந்து கீழே குதித்ததும் சோஷியல் மீடியாவில் வீடியோவாக வைரலாகி, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

English summary
30 Year old man falls from 19th floor trying to escape fire at Mumbai Appartment, and viral video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X