பெண்கள் பெயரில் ஃபேக் ஐடி.. ஆண்களை ஆபாசமாக எடுத்த 80 வீடியோக்கள்.. அதிர வைக்கும் மோசடி.. 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையை சேர்ந்த ஒரு கும்பல் சமூகவலைதளங்களில் இளம்பெண்களை போல் போலியாக ஐடி உருவாக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக சைபர் கிரைம் போலீஸார் தகவல் கிடைத்தது. இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இளம்பெண்களை போல் இந்த 5 பேரும் போலியாக ஒரு ஐடியை உருவாக்கியுள்ளனர். அந்த ஐடி மூலம் பல்வேறு நபர்களுக்கு பிரன்ட் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளனர்.

இதை ஏற்கும் ஆண்களிடம் முதலில் நட்பாக பேசும் இந்த நபர்கள், அதன் பின்னர் காதல் வலையில் விழ வைப்பர். பின்னர் இவர்களை காதலிப்பது போல் நம்பிக்கையை வளர்த்துவிடுகிறார்கள்.

ஆண்கள்

ஆண்கள்

இதில் சபலத்தில் சிக்கும் ஆண்களை கேமரா முன்பு சிக்குவோரை ஆபாச செயலில் ஈடுபட வைக்கிறார்கள். அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து கொள்கிறார்கள். இதிலிருந்து வசதி படைத்தவர்களை அந்த கும்பல் டார்கெட் செய்யும்.

பணம் பறிக்கும் செயல்

பணம் பறிக்கும் செயல்

மேலும் ஆபாச வீடியோக்களை காட்டி அந்த நபர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவர். இந்த கும்பல் கேட்கும் தொகையை கொடுக்காவிட்டால் சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என அஞ்ச வைப்பர். இதனால் மானம் பறி போகும் என்ற அச்சத்தால் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்துவிடுகிறார்கள்.

போலி ஐடிக்கள்

போலி ஐடிக்கள்

இவர்கள் சமூகவலைதளத்தில் 10 க்கும் மேற்பட்ட போலி ஐடிகளை உருவாக்கியுள்ளனர். இதற்காக 6 மெயில் ஐடிகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். சுமார் 250 க்கும் மேற்பட்டவர்கள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 80 வீடியோக்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்துள்ளார்கள்.

டெலிகிராம் வீடியோக்கள்

டெலிகிராம் வீடியோக்கள்

டெலிகிராமில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் கொடுத்ததை அடுத்து போலீஸார் விசாரணையை தொடங்கியதை அறிந்த அந்த கும்பல் க்ரூப்பையே செயலற்று கிடக்க வைத்துவிட்டனர். இவர்களிடம் முக்கிய புள்ளிகளின் ஆதாரங்கள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+