28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது!
சிகிச்சைக்கு வந்த பெண்ணை 58 வயது டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
மும்பை: 28 வயது பெண்ணை 58 வயது டாக்டர் நாசம் செய்துவிட்டார்.. நம்பி சிகிச்சைக்காக கிளீனிக் போன பெண்ணுக்கு மயக்க ஊசியை போட்டு.. சீரழித்து.. அதை வீடியோ எடுத்து.. மிரட்டி மீண்டும் மீண்டும் சீரழித்துள்ளார் டாக்டர்!
ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு வயது 28 ஆகிறது. மூல நோயால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். அதனால் அந்த பகுதியில் கிளீனிக் நடத்தி வந்த ஒரு டாக்டரிடம் கடந்த 2015-ம் ஆண்டு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அந்த டாக்டர் வன்ஸ்ராஜ் திவிவேதி. இவருக்கு வயது 58 ஆகிறது.

கிளினிக் சென்றதுமே பெண்ணுக்கு ஊசி போட்டுள்ளார் டாக்டர். கொஞ்சநேரம் அங்கேயே தூங்குமாறும் சொல்லி உள்ளார். ஊசி போடவும், அந்த இடத்திலேயே தூங்கிவிட்டார் பெண். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் எழுந்து வீட்டுக்கும் கிளம்பி போய்விட்டார்.
கொஞ்ச நேரத்தில், அவர் செல்போனுக்கு ஒரு வீடியோ வந்தது. அதை என்னவென்று பெண் ஓபன் செய்து பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தார். கிளீனிக் டாக்டர் இந்த பெண்ணை தூங்கி கொண்டிருந்தபோது பாலியல் அக்கிரமம் செய்து கொண்டிருக்கிறார். இதனால் அந்த டாக்டரை நேரில் பார்த்து ஆவேசமாக சத்தம் போட்டார்.
ஆனால், டாக்டரோ, இதை பற்றி வெளியில் சொன்னால் வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவேன் என்று மிரட்டினார். இதோடு விடாமல், அந்த வீடியோவை அடிக்கடி காட்டியே, பெண்ணை பலமுறை கூப்பிட்டு நாசம் செய்துள்ளார். இதனிடையே, அதாவது போன வருஷம் பெண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் மலாடு பகுதியில் கணவனுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த விஷயம் கேள்விப்பட்டும் டாக்டர் பெண்ணை விடவே இல்லை. தொடர்ந்து தன் ஆசைக்கு இணங்குமாறு சொல்லவும், பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த டாக்டர் அந்த வீடியோவை பெண்ணின் கணவனுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த கணவன், மனைவியிடம் இதை பற்றி விசாரிக்கவும்தான் கதறி அழுதவாறே நடந்த கொடுமைகளை பற்றி விரிவாக சொன்னார். இதையடுத்து தம்பதி இருவரும் மேக்வாடி ஸ்டேஷனில் புகார் தந்தனர். அத்துடன், அந்த வீடியோ ஆதாரத்தையும் ஒப்படைத்தனர். இதையடுத்து டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications