அவசரத்திற்கு சென்ற சிறுமி! கழிவறையில் கையை கட்டி வாயை பொத்தி! சிதைத்த காமக் கொடூரனுக்கு போலீசார் வலை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனே ரயில் நிலையம் அருகே உள்ள பொதுக் கழிப்பறையில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புனே ரயில் நிலையம் அருகே அவசர தேவைக்காக 12 வயது சிறுமி ஒருவர் கழிவறைக்கு சென்றதாகவும், அப்போது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் சிறுமியின் கைகளை கட்டியதோடு , வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சிலர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்ததையடுத்து, வரச்சா மற்றும் கபோதரா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டதோடு, விசாரணை நடத்தினர்.

புனேவில் அதிர்ச்சி
வெள்ளிக்கிழமை அதிகாலை புனே ரயில் நிலையம் அருகே உள்ள பொதுக் கழிப்பறையில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் பண்ட்கார்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதோடு, குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமி பலாத்காரம்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரின் பெயர் தெரியவில்லை, ஆனால் அவர் முப்பதுகளின் நடுப்பகுதியில் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(i) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாய் புகார்
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றம் நடந்ததாக கூறப்படும் பொது கழிப்பறைக்கு அருகில் உள்ள பகுதியில் வசிப்பவர் என்று போலீசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 மணியளவில் கழிவறைக்குச் சென்றபோது அந்த மர்ம நபர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அச்சிறுமியின் தாயார் கூறினார் என போலீசார் கூறியுள்ளனர்.

போலீசார் விசாரணை
இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு உருவான நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார் மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சந்தேக நபர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications