செம்ம ட்விஸ்ட்.. நரபலி கொடுக்க இழுத்துச்சென்ற கணவன்.. கடைசி நேரத்தில் மனைவி செய்த காரியம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: நரபலி கொடுக்க கணவன் இழுத்துச் சென்று கொண்டிருந்திருக்கிறார். கடைசி நேரத்தில் மனைவி செய்த காரியத்தால் உயிர் தப்பி உள்ளார். என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்

Recommended Video

    செம்ம ட்விஸ்ட்.. நரபலி கொடுக்க இழுத்துச்சென்ற கணவன்.. கடைசி நேரத்தில் மனைவி செய்த காரியம்!

    இந்தியா முழுவதுமே நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இதை நம்பி தங்கள் மனைவியையும் பிள்ளைகளையும் பறிகொடுத்து வருகிறார்கள் மூடர்கள் சிலர்.

    மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இவர் அடிக்கடி சுடுகாடு பக்கம் போவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இது மனைவி மீனாவிற்கு சந்தேகத்தை கொடுத்து வந்திருக்கிறது. பூஜை, மந்திரம் என்று எந்நேரமும் கணவன் இருப்பதால் ஏதோ பக்தியில் தீவிரமாக இருக்கிறார் என்று நினைத்து வந்துள்ளார்.

    புதையல்

    புதையல்

    ஒருநாள் பெண் மந்திரவாதி உடன் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டிற்கு வந்ததும் அந்த பெண் மந்திரவாதி பூஜை அறையில் உட்கார்ந்து பூஜைகள் செய்ய கணவன் அதற்கு உதவி செய்து வந்திருக்கிறார். அப்போது திடீரென்று அந்தப் பெண் இப்போது யாரையாவது நரபலி கொடுத்தால் உனக்கு புதையல் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

    மீனா மறுப்பு

    மீனா மறுப்பு

    புதையல் கிடைக்க வேண்டுமென்றால் நீ நரபலி கொடுத்தாக வேண்டும் என்று சொன்ன உடனேயே அவர் மனைவி பக்கம் திரும்ப, மனைவி மீனா அரண்டு போய் நிற்க எனக்கு புதையல் கொடுக்க வேண்டுமென்றால் நீ உன்னை நரபலி கொடுத்தாக வேண்டும். நான் நன்றாக வாழ்வதற்காக சம்மதம் என்று சொல் என்று கேட்க அதிர்ச்சி அடைந்த மீனா மறுப்பு தெரிவித்துள்ளார்.

    சம்மதம்

    சம்மதம்

    அவரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து பூஜையில் அமர வைத்திருக்கிறார். கொஞ்ச நேரம் சம்மதம் என்பது போல அமர்ந்திருந்த மீனா, கொஞ்சம் அசந்த நேரத்தில் கணவனை பிடித்து தள்னி விட்டார். அவரிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறி ஓடி வந்துள்ளார். தந்தை வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

    பெண் மந்திரவாதி

    பெண் மந்திரவாதி

    அங்கே தனக்கு நடந்தவற்றைச் அழுதபடி கூறியிருக்கிறார். அதை கேட்டு அதிர்ந்து போன அவர்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் விரைந்து சென்று மீனாவின் கணவர் சந்தோஷ் பெண் மந்திரவாதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    கடைசி நிமிடம்

    கடைசி நிமிடம்

    அந்தப் பெண் மந்திரவாதி வேறு யாரையாவது நரபலி கொடுத்து இருக்கிறாரா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடைசி நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டதால் பெண் உயிர் தப்பி உள்ளார். நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்ற முட்டாள் தனமான நம்பிக்கையால் உயிர்கள் பலியாகும் கொடுமை இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பது கசப்பான செய்திதான்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+