பீமா கோரேகான் : அம்பேத்கர் பிறந்த நாளில் சிறைக்கு அனுப்பப்பட்ட அம்பேத்கர் உறவினர் ஆனந்த் டெல்டும்டே
மும்பை: பீமா கோரேகான் வழக்கில் சமூக ஆர்வலரும் அண்ணல் அம்பேத்கர் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருமான ஆனந்த் டெல்டும்டே நீதிமன்றத்தில் சரணடைந்தார். அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ந் தேதியன்று அவரது குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் டெல்டும்டே சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் என்பது அரசியல் பார்வையாளர்களின் விமர்சனம்.
மகாராஷ்டிராவில் 2017-ம் ஆண்டு டிசம்பர் 31, 2018-ம் ஆண்டு ஜனவரி 1 ஆகிய நாட்களில் எல்கார் பரிஷத் மற்றும் பீமா கோரேகான் ஆகியவற்றில் நடந்த வன்முறைகள் தொடர்பாக ஏற்கனவே பல சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆனந்த் டெல்டும்டே வீடும் சோதனையிடப்பட்டது.

பின்னர் பீமா கோரேகான் வன்முறையில் ஆனந்த் டெல்டும்டேவுக்கு தொடர்பிருக்கிறது என மகாராஷ்டிரா போலீசார் கூறி வந்தனர். இதை எதிர்த்து நீதிமன்றங்களில் ஆனந்த் டெல்டும்டே வழக்குகளும் தொடர்ந்தார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் கடைசியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஆனந்த் டெல்டும்டே,. மற்றொரு சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லாகா ஆகியோரது முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் இருவரும் நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை ஏற்று ஆனந்த் டெல்டும்டேவும் கவுதம் நவ்லாகாவும் மும்பை மற்றும் டெல்லி நீதிமன்றங்களில் சரணடைந்தனர். வரும் 18-ந் தேதி ஆனந்த் டெல்டும்டேவை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு (என்.ஐ.ஏ) மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அரசியல் சாசன சிற்பியான அண்ணல் அம்பேத்கரின் பேத்தியை திருமணம் செய்து கொண்டவர் ஆனந்த் டெல்டும்டே. அம்பேத்கரின் பிறந்த நாளான நேற்று அம்பேத்கரின் உறவினரான ஆனந்த் டெல்டும்டே சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications