லாக்டவுனில் தனிமையில் இருந்த சுஷாந்த்.. உடல்நலம் வேறு பாதிப்பு.. தற்கொலைக்கு தூண்டியது எது?
மும்பை: மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
தோனியின் வாழ்க்கை வரலாறான MS Dhoni untold Story என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் பெறும் வெற்றி பெற்று தமிழக ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்த நிலையில் மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

லாக்டவுன்
இவரை பார்க்க வந்த நண்பர் அளித்த தகவலின் பேரில் சுஷாந்த் வீட்டிற்கு வந்த போலீஸார் கதவை உடைத்து அவரது சடலத்தை மீட்டனர். லாக்டவுனால் அவர் அந்த வீட்டில் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவரது தற்கொலைக்கான காரணம் ஏதும் தெரியவில்லை.

மும்பை
எனினும் முதற்கட்ட விசாரணையில் நடிகர் சுஷாந்த் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவரது இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அவரது பெண் மேனேஜர் திஷா சாலியனும் மும்பையில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பயணம்
தற்போது சுஷாந்தும் தற்கொலை செய்து கொண்டதால் இருவரது சாவிலும் ஏதோ மர்மம் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவரது மறைவு திரைத்துறையினர் மட்டுமல்லாது விளையாட்டு துறையினரையும் அதிகமாக பாதித்துள்ளது. இவர் ஜீ டிவியில் ஒரு டிவி ஷோ மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார்.

வாய்ப்பு
நடிகை அங்கிதா லோக்நாடேவுடன் இவரது கெமிஸ்டிரி நன்றாக வொர்க் அவுட் ஆனதால் இவர்களுக்கு ரசிகர் பட்டாளமே இருந்தது. இதையடுத்து பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைத்து நடிக்கத் தொடங்கினார். சுஷாந்த் சிங் நடித்த கடைசிப் படமான Chhichhore தற்கொலைக்கு எதிராக எப்படி போராடி வெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்திய கதையாகும். இது போன்ற படத்தில் நடித்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications