பூனம் பாண்டே, ஷெர்லினை ஆபாசமாக படமெடுத்து ஓடிடியில் வெளியிட்ட ராஜ் குந்த்ரா.. போலீஸ் சார்ஜ்ஷீட்
மும்பை: நடிகைகள் பூனம் பாண்டே, ஷெர்லினை ஆபாசமாக படம் எடுத்து அதை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஓடிடி தளத்தில் வெளியிட்டார் என போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி ஆபாச வீடியோ எடுத்து ஓடிடி தளத்தில் விற்பனை செய்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
அதே ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் தீவு ஒன்றில் மாடல் அழகிகளை பயன்படுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக போலீஸார் நடத்திய ரெய்டில் தெரியவந்தது. இது தொடர்பாக அங்கிருந்த தயாரிப்பாளர் யாஷ்மின் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஷில்பா ஷெட்டி
அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு ஆபாச படம் தயாரிப்பதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதன் பின்னர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். பின்னர் சில நாட்களில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் நடிகைகள் பூனம் பாண்டே மற்றும் ஷெர்லின் சோப்ராவுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

ஆபாச படம்
அது மட்டுமல்லாமல் ராஜ் குந்த்ரா ஆபாச படத்தை விற்பனை செய்வதற்காகவே சொந்தமாக செயலியை உருவாக்கி அதன் மூலம் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக மும்பை போலீஸார் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

தொழிலதிபர் ராஜ் குந்த்ரா
அதில் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, மாடல் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, தயாரிப்பாளர் மீதா மற்றும் கேமராமேன்கள் சேர்ந்து மும்பையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுத்து ஆபாச வீடியோ தயாரித்து அதை பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதில் வீடியோக்களை விநியோகம் செய்ததில் பெரும் பங்கு ராஜ் குந்த்ராவுக்கு இருந்தது என அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை
சுமார் 450 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் ராஜ் குந்த்ரா, அவரது பணியாளர் உமேஷ் காமத், ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, கேமராமேன் ராஜு தூபே, பனானா பிரைம் ஓடிடி தளத்தின் இயக்குநர் சுவஜித் சவுத்ரி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக தேர்க்கப்பட்டுள்ளனர். பனானா பிரைம் ஓடிடி தளத்தின் டைரக்டர் சுவஜித், ஆபாச வெப் சீரியஸ்களை தயாரித்து வந்ததும் தெரியவந்தது.

பூனம் பாண்டேவின் ஆபாச படம்
பூனம் பாண்டே தனது ஆபாச படத்தை தானே தயாரித்து அதை ராஜ் குந்த்ராவிடம் கொடுத்து அவருடைய செயலியில் வெளியிட செய்வார் என்றும் ஷெர்லின் சோப்ராவின் ஆபாச வீடியோவை கேமரமேன் ராஜு படம் பிடித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூனம் பாண்டேவும் ஷெர்லினும் ஆபாச வீடியோ தயாரித்து வெளியிடுவதற்காக அவர்களிடம் இருந்து ராஜ் குந்த்ராவின் நிறுவனம் பணம் வசூல் செய்துள்ளது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications