அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஐஸ்வர்யா ராயை பார்த்தீர்களா? 100 % உறுதிப்படுத்தும் "அந்த" சம்பவம்?
மும்பை: உலக அழகி ஐஸ்வர்யா ராயும், அவருடைய கணவர் அபிஷேக் பச்சனும் பிரிந்து வாழ்கிறார்கள் என்பது ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் தெரியவந்தது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய்! அன்றெல்லாம் பெண்கள் காதலுக்கு உடனே ஓகே சொல்லாவிட்டால், அந்த பையனின் நண்பர்கள் சொல்லும் ஒரு வார்த்தை- "மச்சான் இவ என்ன பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராயா? விட்டு தள்ளு" என்பார்கள்.

அந்த அளவுக்கு அழகாக இருப்பார். இவருக்கும் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் பிரிய போவதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அபிஷேக் பச்சனின் கையில் பச்சை நிற மோதிரம் இல்லாதது என்கிறார்கள். திருமணம் செய்து 16 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்து வந்த நிலையில் இவர்கள் பிரிவதாக வந்த தகவல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சினிமா பத்திரிகையாளர்கள் சிலர் கூறுகையில் ஐஸ்வர்யாவுக்கும் அபிஷேக்கிற்கும் திருமணமானதில் இருந்தே பிரச்சினைதான். அபிஷேக்கை விட மூத்தவர் ஐஸ்வர்யா!. ஆனாலும் காதலுக்காக இருவரும் இத்தனை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தனர். இவர்களுக்கு ஈகோதான் முதல் பிரச்சினையாக இருந்தது.
தன்னை விட ஐஸ்வர்யா பெயர், புகழ், பணம் என இருப்பது அபிஷேக்கிற்கு ஈகோ ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. இது இலை மறைவு காய் மறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இந்த பிரிவு என்பது ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான பிகேசி கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள், மாநில இன்னாள், முன்னாள் முதல்வர்கள், ரஜினிகாந்த் அவருடைய மனைவி லதா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூர்யா - ஜோதிகா ஆகியோர் சென்றனர்.
அந்த வகையில் அமிதாப் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், அவருடைய சகோதரி, அவருடைய கணவர், அவர்களது மகன், மகள் ஆகியோர் வருகை தந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இதையடுத்து சிறிது நேரம் கழித்து ஐஸ்வர்யா பச்சன் அவருடைய மகள் ஆராத்யாவுடன் தனியே வருகிறார். ஜெயா பச்சன் தனது மகள் குடும்பம் வந்த பிறகுதான் புகைப்படமே எடுத்தார். ஆனால் அபிஷேக் பச்சன் ஜோடியாக இல்லாமல் தனியாகவே அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்தார்.
எனவே நெருப்பில்லாமல் புகையாது என்பதை போல் இவர்களுக்குள் ஏதோ பிரச்சினை இருப்பது ஊர்ஜிதமாவதாகவே சொல்லப்படுகிறது. ஜெயா பச்சன் ஒரு வேளை ஐஸ்வர்யாவை பார்த்தாரோ என்னவோ தெரியவில்லை. திடீரென அவருடைய முகம் கடுகடுத்து காணப்பட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications